"எங்களுக்கு கொடுத்த வேலையை செய்தோம்! மற்றவர்களை தெரியாது!" அதிரடி வாக்குமூலம்!!

எங்களுக்கு கொடுத்த வேலையை மட்டுமே செய்தோம் மற்றவர்களை தெரியாது என்று கூறியுள்ளார் எஸ்பிஐ ஏடிஎம் கொளீளையாளி அமீர்
 
atm

தற்போது நம் தமிழகத்தில் சில தினங்களாக கொள்ளையின் அதிகரிப்பு காணப்படுகிறது. அதுவும் குறிப்பாக சென்னையில் நாளுக்கு நாள் கொள்ளையடிக்கும் சம்பவம் அதிகமாக உள்ளது.இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பாக சென்னையில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம் களில் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அனைவருக்கும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் உண்டாக்கியது. மேலும் இதில் வட மாநிலத்தவர் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. அதன்படி எஸ்பிஐ டெபாசிட் எந்திரங்களில் கொள்ளையடித்து விட்டு ஹரியானா சென்றுள்ளனர்.sbi

மேலும் அங்கு முதலில் கொள்ளையர் அமீர் என்பவரை தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர். அதன் பின்னர் அவரிடம் வாக்குமூலம் எடுத்தனர் தற்போது அவர் சில அதிர்ச்சிகரமான வாக்குமூலங்களை அளித்துள்ளார். அதன்படி தங்களுக்கு கொடுத்த வேலையை மட்டுமே செய்ததாகவும் எஸ்பிஐ ஏடிஎம் கொள்ளை வழக்கில் கைதான அமீர் வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும் ஹரியானா மே வாட் பகுதியை சேர்ந்த மற்ற கொள்ளையர்கள் பற்றி தெரியாது எனவும்  அமீர் தகவல் அளித்துள்ளார்.

மேலும் நண்பர் வீரேந்தர் மற்றும் தானும் அரும்பாக்கத்தில் அறை எடுத்து தங்கி ஏடிஎம் கொள்ளையை அரங்கேற்றி யதாக அமீர் வாக்குமூலம் அளித்துள்ளார் கொள்ளைப் பணத்தை வங்கி கணக்கு ஒன்றில் டெபாசிட் செய்ததுடன் 2 லட்சம் மட்டுமே எடுத்துச் சென்றதாகவும் தகவல் அளித்துள்ளார். மேலும் கொள்ளை பணம் டெபாசிட் செய்யப்பட்டு அது யாருடைய வங்கி கணக்கு என போலீசார் தீவிர விசாரணையில் உள்ளன .மேலும் அவரும் தன் நண்பர் வீரேந்தர் சேர்ந்து ஆறு இடங்களில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம் களில் கொள்ளை அடித்ததை ஒப்புக்கொண்டார்.

சென்னை ராமாபுரம், பாண்டிபஜார், வடபழனி, சின்மயா நகர், வேளச்சேரி, தரமணியில் கொள்ளையடித்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். கூட்டாளிகள் தொடர்பாக ஹரியானாவை சேர்ந்த அமீரிடம் 2 நாள் போலீஸ் காவலில் விசாரணை நடக்கிறது.

From around the web