நீட் அரசியலை நீட்டாக கையாள தயாராக உள்ளோம்: எச்.ராஜா

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் நாளை நீட் தேர்வு நடைபெறவிருக்கும் நிலையில் ஒரு பக்கம் நீட் தேர்வுக்கு பயந்து ஒரு சில மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர். ஆனால் பல மாணவர்கள் நீட் தேர்வை எதிர்கொள்ள தயாராக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் நீட் காரணமாக ஏற்படும் உயிரிழப்புகளை வைத்து ஒருசில கட்சிகள் அரசியல் செய்து வருகின்றன என்றும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில் பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா அவர்கள் பேட்டி ஒன்றில் இதுகுறித்து கூறியதாவது: நீட்டை வைத்து அரசியல் செய்ய நினைத்தால் நீட்டா கையாள்வதற்கு பிஜேபி தயாராக உள்ளது என்று கூறியுள்ளார் 

நீட் தேர்வை கண்டு ஒருவர் தற்கொலை செய்துகொள்வது துரதிஷ்டமானது. உயிரிழப்பு என்பதை ஏற்றுக் கொள்ளக்கூடிய விஷயம் அல்ல என்றும் ஆனால் அதே நேரத்தில் பிணத்தை வைத்து திமுக அரசியல் செய்வது அநாகரிகத்தின் உச்சம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா அவர்களின் இந்த கருத்துக்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு கமெண்ட்டுகள் பதிவாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது

From around the web