நமக்கும் சசிகலாவுக்கும் இருப்பது அண்ணன் - தம்பி பிரச்சனை: அமைச்சர் வேலுமணி

 

நமக்கும் சசிகலாவுக்கும் இருப்பது அண்ணன் தம்பி பிரச்சனை என்றும் நமது பொது எதிரியை முதலில் வீழ்த்த வேண்டும் என்றும் அமைச்சர் வேலுமணி பேசி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுதலையான சசிகலா இன்று அதிகாலை சென்னை வந்தார் என்பது தெரிந்ததே. சென்னையில் அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது அனைவரும் ஒற்றுமையாக இருந்து பொது எதிரியான திமுகவை வீழ்த்த வேண்டும் என்று கூறினார். அதிமுகவை கைப்பற்றுவது குறித்தோ அல்லது முதல்வர் துணை முதல்வர் குறித்து அவர் எந்தவிதமான சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது 

sasikala

இதனை அடுத்து அவர் அதிமுக-அமுமுக இணைப்பை விரும்புகிறார் என்றும் அதிமுகவுடன் அவரும் சுமுகமாக நட்பை தொடர்வார் என்று கூறப்படுகிறது. தேர்தல் வரை திமுகவை வீழ்த்துவது ஒன்றே குறிக்கோள் என்ற எண்ணம் தான் இப்போதைக்கு சசிகலாவிடம் இருப்பதாகவும் தேர்தல் முடிந்த பின்னர் முதலமைச்சர் யார்? பொதுச்செயலாளர் யார்? என்பதை முடிவு செய்து கொள்ளலாம் என்று அவர் நினைப்பதாகவும் கூறப்படுகிறது

இந்த நிலையில் தமிழக அமைச்சர் வேலுமணி அவர்கள் கிட்டத்தட்ட அதே கருத்தைத்தான் கூறியுள்ளார். பொது எதிரியை ஆட்சிக் கட்டிலில் அமர விடாமல் வீழ்த்த ஒற்றுமையுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் சசிகலா மற்றும் நமக்குள் இருப்பது அண்ணன் தம்பி பிரச்சனை தான் என்றும் நம் பொது எதிரி திமுக தான் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

From around the web