தென் மாவட்டங்களுக்கு மகிழ்ச்சி! மீனவர்களுக்கு எச்சரிக்கை!

தெற்கு வங்க கடல், தென்கிழக்கு வங்க கடல், மேற்கு வங்க கடல், வட மேற்கு வங்க கடல் பகுதிகளில் பலத்த காற்று வீச வாய்ப்பு!
 

கோடைகாலம் என்றாலே மக்கள் மத்தியில் முதலில் நினைவு வருவது மே மாதம் தான். ஆனால் தமிழகத்தில் மே மாதம் தொடங்க இன்னும் சில நாட்கள் உள்ள நிலையில் வெப்பத்தின் தாக்கம் ஆனது பல பகுதிகளில் தலைவிரித்தாடுகிறது. மேலும் ஒரு சில பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் அப்பகுதிகளில் வெளியே வரமுடியாத அளவிற்கு வெப்பம் கொளுத்துகிறது. சென்னை வானிலை ஆய்வு மையமானது தென்மாவட்டங்களுக்கு சில மகிழ்ச்சியான கூறியுள்ளது.

weather

அதன்படி அடுத்த இரண்டு நாட்களுக்கு தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. கேரளா மற்றும் கர்நாடக ஓட்டி நிலவும்  காரணமாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.  ஏனைய மாவட்டங்கள் புதுச்சேரி காரைக்கால் போன்ற பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

மேலும் ஏப்ரல் 2ஆம் தேதி முதல் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வெப்பநிலை இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.  தெற்கு வங்க கடல், தென்கிழக்கு வங்க கடல், மேற்கு வங்க கடல் ,வட மேற்கு வங்க கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசுவதால் மீனவர்கள் கடலில் சென்று மீன் பிடிக்க வேண்டாம் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகத்தின் தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய உள்ளதால் அப்பகுதியில் உஷ்ணம் குறையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

From around the web