"குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு"; மீனவர்களுக்கு எச்சரிக்கை!!

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது
 
fishers

தற்போது நம் தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.  தற்போது தமிழகத்தில் மழை காலம் நிகழ்கிறது. இதனால் தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்வதும் ஒரு சில பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் தெரிகிறது. தற்போது வானிலை ஆய்வு மையமும் இன்றைய தினம் சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறியிருந்தது.bengal ocean

இதன் தொடர்ச்சியாக தற்போது வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மத்திய வங்கக் கடல் பகுதியில் அடுத்த 24 மணிநேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. வங்கக்கடலில் மத்திய, தெற்கு அந்தமான் பகுதிகளில் இன்றும் நாளையும் சூறாவளி காற்று வீச வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

செப்டம்பர் 12ம் தேதி முதல் 14ம் தேதி வரை வங்ககடலில் மத்திய, ஒரிசா மேற்கு, வடக்கு அந்தமான் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது. அரபிக்கடலில் தென்மேற்கு, மத்திய மேற்கு பகுதிகளில் இன்று முதல் செப்டம்பர் 14ஆம் தேதி வரை பலத்த காற்று நீச வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. 50 கிலோ மீட்டர் வேகத்தில் தொடங்கி 60 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் என்பதால் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

From around the web