"மீனவர்களுக்கு எச்சரிக்கை"-இரு நாட்களுக்கு சென்னையில் இடி மின்னலுடன் கூடிய மழை!!

சென்னையில் இன்னும் அடுத்த இரண்டு நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது
 
fishers

தற்போது நம் இந்தியாவில் பல மாநிலங்களில் மழை நீரானது வெள்ளம் போல பெய்து வருகிறது. அதுவும் குறிப்பாக ஒடிசா மாநிலத்தில் உள்ள பல மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஓடுகிறது. மேலும் நம் தமிழகத்திலும் தற்போது மழைக்காலம் தொடங்கி உள்ளதால் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் தொடர்ச்சியாக மழை பெய்து கொண்டு வருகிறது. மேலும் வானிலை ஆய்வு மையம் தமிழகத்திற்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளது.rain

இந்நிலையில் தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.அதன்படி சென்னையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும் மழைக்காலம் தொடங்கினால் மீனவர்களுக்கு  மீன் பிடிக்க கடலுக்கு செல்ல எச்சரிக்கைவிடுவர். அது தொடர்ச்சியாக தமிழகத்தில் நடைபெற்று கொண்டே வருகிறது.

இந்நிலையில் மீனவர்களுக்கு மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம். அதன்படி தென்மேற்கு அரபிக் கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக் கூடும் என்பதால் அப்பகுதிக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் கூறியுள்ளது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரமும் தற்போது பாதிப்பிற்கு உள்ளானது தெரியவந்துள்ளது.

From around the web