எச்சரிக்கை !மீனவர்களே போகாதீர்கள் கடலுக்கு! 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும்!

மே 22 23 இல் தமிழக கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று வீசுவதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது!
 
fishers

தற்போது நாடெங்கும் கோடை காலம் நிலவுகிறது. இதனால் நாடெங்கும் பல பகுதிகளில் குடிநீர் பற்றாக்குறையும் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. மேலும் தமிழகத்தில் பல பகுதிகளில் வெயிலின் தாக்கம் ஆனது மிகவும் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் மக்கள் அனைவரும் வெளியே செல்ல முடியாத அவருக்கு மிகுந்த அச்சத்தில் உள்ளனர். ஆனால் சில தினங்களுக்கு முன்பாக அரபிக்கடலில் புயல் ஒன்று உருவானது. இந்த புயலானது குஜராத் மும்பை கர்நாடகா போன்ற பகுதிகளில் பெரும் சேதத்தை உருவாக்கியது.weather

மேலும் நம் நட்பு மாநிலமான கேரளாவிலும் இதன் பாதிப்பு அதிகரித்து இருந்தது. இந்நிலையில் தற்போது வானிலை ஆய்வு மையம் ஆனது தமிழகத்தில் ஒரு 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது. மேலும் நான்கு நாட்களுக்கு தேனி, நீலகிரி போன்ற மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் மழை நீடிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

காரணம் என்னவெனில் மே 22, 23 ஆம் தேதியில் தமிழக கடலோர பகுதி வங்கக்கடலில் தென்மேற்கு பகுதி மத்திய வங்கக் கடல் பகுதியில் பலத்த காற்று வீசும் அதனால் போக வேண்டாம் என்றும் கூறியுள்ளது. மேலும் இந்த காற்றானது மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என்பதால் மீனவர்கள் எக்காரணம் கொண்டும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும் பெரும்பாலும் மீனவர்கள் இந்த கோடை காலத்திலேயே கடலுக்குள் செல்வர். ஆனால் தற்போது காலநிலை மாற்றம் அவர்களது வாழ்வை மிகவும் சங்கடத்திற்கு தள்ளியது. மேலும் அவர்கள் தொழில் மிகவும் முடக்கப்பட்டுள்ளது.

From around the web