சிறுகுறு தொழிலதிபர்களே லோல் வேணுமா? ஃபேஸ்புக் தருகிறது!

 
facebook


உலகின் நம்பர்-1 சமூக வலைதளங்களில் ஒன்றான பேஸ்புக் ஏற்கனவே பயனாளர்களுக்கு பல வசதிகளை செய்து கொடுத்து வரும் நிலையில் தற்போது லோன் கொடுக்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது 

இந்தியா உள்பட 30 நாடுகளில் சிறு குறு தொழில் அதிபர்களுக்கு பேஸ்புக் லோன் வழங்குகிறது. 17 முதல் 20 சதவீத வட்டியுடன் கடன் வழங்கப் போவதாகவும் பெண்களுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்கப் போவதாகவும் பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது

முதல்கட்டமாக டெல்லி, குர்கான், மும்பை, ஐதராபாத், பெங்களூரு ஆகிய நகரங்களில் உள்ள தொழிலதிபர்களுக்கு லோன் கொடுக்க உள்ளதாகவும் அதன் பின்னர் சென்னை உள்பட மற்ற நகரங்களில் விரைவில் லோன் கொடுத்த உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது 

பேஸ்புக் நிறுவனம் லோன் கொடுப்பதற்காக Indifi என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் லோன் கொடுப்பது மற்றும் வசூலிப்பது ஆகிய இரண்டு பணிகளையும் இந்த நிறுவனமே கவனிக்கும் என்றும் கூறப்படுகிறது

From around the web