வடகிழக்கு பருவமழை குறித்து புகார் அளிக்க வேண்டுமா? இதோ தொலைபேசி எண்கள்!

 

சென்னையில் நேற்றிரவு முதல் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளில் வெள்ளப்பெருக்கும், சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரால் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டுள்ளது

இந்த நிலையில் சென்னை மக்கள் வடகிழக்கு பருவமழை குறித்த புகார்கள் தெரிவிக்க அவசர எண்களை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.  044 2538 4530, 044 2538 4540 ஆகிய இரண்டு எண்களிலும், அதுமட்டுமின்றி 24/7 இயங்கக்கூடிய கட்டுப்பாட்டு மையத்தினையும் (1913) பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது

மேலும் அடுத்து வரும் 24 மணி நேரத்திற்கு சென்னை , காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், ராணிப்பேட்டை, திருநெல்வேலி, தென்காசி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

அதேபோல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், தென்காசி, ராணிப்பேட்டை, விருதுநகர், நெல்லை ஆகிய 8 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை பெய்யக் கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

From around the web