பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் சொன்ன புத்தகங்களை வாங்க வேண்டுமா? இதோ ஒரு வாய்ப்பு

 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் ஒவ்வொரு வாரமும் புத்தகங்கள் குறித்து பேசுவது அனைவரும் அறிந்ததே. அந்த புத்தகங்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் வாங்க தற்போது ஒரு அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது 

பிக்பாஸ் நிகழ்ச்சி 105 நாட்கள் நடைபெற்ற நிலையில் சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் ஆரி இந்த போட்டியின் வெற்றியாளர் என்று தெரிந்தது. இந்த நிலையில் ஒவ்வொரு வாரமும் சனி ஞாயிறு கிழமைகளில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல்ஹாசன் அதில் பல சமூக கருத்துக்களை பேசி வருவார் என்பது குறிப்பிடத்தக்கது.

kamal book

அந்த வகையில் ஒவ்வொரு வாரமும் தனக்கு பிடித்த புத்தகங்களை குறித்து அவர் சில நிமிடங்கள் பேசுவார். மேலும் அந்த புத்தகத்தில் தனக்கு பிடித்த வரிகள், அந்த புத்தகத்தின் ஆசிரியர் குறித்தும் அவர் விளக்கமளித்தார்

இந்த நிலையில் சென்னையில் 44 வது புத்தகக் கண்காட்சியில் வரும் 24ஆம் தேதி தொடங்க உள்ளது. 14 நாட்கள் நடைபெறும் இந்த புத்தக கண்காட்சி மார்ச் 9ஆம் தேதி நிறைவடைகிறது. இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் அறிமுகம் செய்த புத்தகங்கள் அனைத்தும் சென்னை புத்தகக் காட்சிகள் வைக்கப்படும் என புத்தகக்கண்காட்சி நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்

எனவே பிக்பாஸ் நிகழ்ச்சியின் அனைத்து வாரங்களிலும் கமல்ஹாசன் அறிமுகப்படுத்திய புத்தகங்களை வாங்க விரும்புவர்கள் இந்த புத்தகக் கண்காட்சிக்கு சென்று வாங்கிக் கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்படுகிறது

From around the web