5 நிமிடம் வெளிநடப்பு செய்துவிட்டு வாருங்கள்: திமுகவுக்கு ஆளுனர் கூறிய ஆலோசனை

எனது உரைக்கு எதிர்ப்பு தெரிவிக்க விரும்பினால் 5 நிமிடம் வெளிநடப்பு செய்து விட்டு பின்னர் திரும்பவும் வாருங்கள் என தமிழக ஆளுநர் திமுகவினர்களுக்கு ஆலோசனை கூறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
இன்று தமிழக சட்டப்பேரவை கலைவாணர் அரங்கில் சற்று முன்னர் கூடிய நிலையில் ஆளுநர் தனது உரையை தொடங்கினார். இந்த நிலையில் ஆளுநரின் உரையின் போது அவ்வப்போது திமுக உறுப்பினர்கள் இடையூறு செய்து கொண்டிருந்த நிலையில் திடீரென தமிழக ஆளுநர் ’எனது உரைக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டுமானால் 5 நிமிடம் வெளிநடப்பு செய்து விட்டு அதன் பின்னர் மீண்டும் வாருங்கள்’ என ஆலோசனை கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
இதனை அடுத்து திமுக தலைவர் முக ஸ்டாலின் உள்பட திமுக எம்.எல்.ஏக்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதனையடுத்து செய்தியாளர்களிடம் அவர் பேசிய முக ஸ்டாலின், ‘7 பேர் விடுதலை குறித்து ஆளுநர் உரையில் எதுவும் இடம்பெறவில்லை என்றும் எனவேதான் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தோம் என்றும், இந்த தொடர் முழுவதும் வெளிநடப்பு செய்வதாகவும், பட்ஜெட் தொடரில் கலந்து கொள்வது குறித்து ஆலோசித்து முடிவு செய்வோம் என்றும் தெரிவித்தார்.
இந்த நிலையில் தமிழக ஆளுநர் தனது உரையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசு நாட்டிலேயே சிறந்த மாநிலமாக தமிழகம் திகழ்கிறது என்று கூறியுள்ளார்