காத்திருப்போர் பட்டியல் நீக்கம் 8 டிஎஸ்பிகளுக்கு பணியிடம்! எந்தெந்த துறையில்?

தேர்தலின்போது காத்திருப்போர் பட்டியலில் இருந்த 8 டிஎஸ்பி களுக்கு மீண்டும் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது!
 
police

தமிழகத்தில் ஏப்ரல் ஆறாம் தேதியை அனைவரும் மறக்கமாட்டார். காரணம் என்னவெனில் தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் மக்கள் அனைவரும் மிகுந்த பாதுகாப்போடு சமூக இடைவெளியை பின்பற்றி முக கவசம் அணிந்து தங்களது வாக்கினை பதிவு செய்தனர். மேலும் வாக்காளர்களுக்கும் பாதுகாக்க அதிகாரிகள் அனைவரும் அவர்களுக்கு முகக்கவசம் கையுறை  போன்றவற்றை வழங்கினார். இந்நிலையில் தேர்தல் சமயத்தில் போது ஒரு சில பகுதிகளில் அசம்பாவிதம் நடைபெற்றது.police

மேலும் தேர்தல் சில டிஎஸ்பிக்கள் காத்திருப்போர் பட்டியலில் இருந்தனர். இந்நிலையில் தற்போது அவர்களுக்கு பணியிடம் விதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதன்படி தேர்தலின்போது காத்திருப்போர் பட்டியலில் இருந்த எட்டு டிஎஸ்பி களுக்கு மீண்டும் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக தகவல் கிடைக்கிறது. அதை தொடர்ந்து கள்ளக்குறிச்சி பொருளாதார குற்றப்பிரிவு-2 டிஎஸ்பி ஆக ராதாகிருஷ்ணன் . எழும்பூர் ரயில்வே போலீஸ் டிஎஸ்பி அன்பரசன், சென்னை கடலோர பாதுகாப்பு குழுமம் டிஎஸ்பி வேல்முருகன் என அரசு வெளியிட்டுள்ளது.

மேலும் சென்னை சமூக நீதி, மனித உரிமை ஆணையர் டிஎஸ்பி ஆக கோவிந்தராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். காஞ்சிபுரம் காவலர் பயிற்சி மையம் டிஎஸ்பி ஆக திருநாவுக்கரசு நியமிக்கப்பட்டுள்ளார். பெரம்பலூர் மாவட்ட சமூக நீதி மனித உரிமை ஆணைய டிஎஸ்பி ஆக வல்லவன் நியமிக்கப்பட்டுள்ளார். ராமநாதபுரம் சரக காவலர் பயிற்சி மைய டிஎஸ்பி சுபாஷ், தஞ்சை சரக காவலர் பயிற்சி மைய டிஎஸ்பி கோ பாலச்சந்திரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

From around the web