வி.ஆர்.எஸ். ஓய்வு பெறுகிறார் சகாயம் ஐ.ஏ.எஸ்: அரசியலில் ஈடுபடுவாரா?

 

மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்தபோது கிரானைட் ஊழலை வெளியே கொண்டு வந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர் சகாயம் ஐஏஎஸ் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது அவர் தமிழ்நாடு அறிவியல் நகர துணை தலைவராக இருந்து வரும் நிலையில் கடந்த ஆறு வருடமாக முக்கியத்துவம் இல்லாத பதவியில் இருந்து வருவதால் அவர் விருப்ப ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது 

இந்த நிலையில் தற்போது ஓய்வு பெற இன்னும் மூன்று ஆண்டுகள் இருக்கும் நிலையில் சகாயம் ஐஏஎஸ் விஆர்எஸ் ஓய்வு கேட்டு விண்ணப்பித்து உள்ளதாகவும் அவருக்கு இன்னும் இரண்டு மாதங்களில் அரசு பதவியில் இருந்து விடுவிக்க அனுமதி அளிக்கப்படும் என்றும் செய்திகள் வெளிவந்துள்ளது

பல ஆண்டுகளாக முக்கியத்துவம் இல்லாத பதவியில் இருப்பதால் தான் மன விரக்தியில் அவர் ஓய்வு முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஓய்வுக்கு பின் அவர் அரசியலில் ஈடுபடுவார் என்றும் தனி அமைப்பு ஒன்றை ஆரம்பித்து சமூக சேவைகளில் ஈடுபட விருப்பம் தெரிவித்து இருப்பதாகவும் தெரிகிறது

அண்ணாமலை அவர்கள் ஐபிஎஸ் பதவியை விட்டுவிட்டு இருந்து அரசியலுக்கு வந்தது போல் சகாயம் ஐஏஎஸ் அவர்களும் அரசியலுக்கு வருவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

From around the web