முடிந்தது வாக்குப்பதிவு தொடங்கியது! சீல்வைக்கும் பணி!

தமிழகத்தின் 234 சட்டமன்ற தொகுதியிலும் ஒரே கட்டமாக வாக்கு பதிவு நடந்து முடிந்தது!
 
முடிந்தது வாக்குப்பதிவு தொடங்கியது! சீல்வைக்கும் பணி!

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெறும் என்று அறிவித்துள்ளது. அதன்படி இன்று காலை முதலே தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் தமிழகத்தின் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை 12 மணி நேரமாக வாக்குப்பதிவு நடைபெற்றது இந்த வாக்குப்பதிவில் பலரும் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். மேலும் தமிழகத்தில் காலையில் தொடங்கிய வாக்குப்பதிவில் பிரபலங்கள் பலரும் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.

tamilnadu

அந்த படி தமிழகத்தில் இளையதளபதி விஜய், அஜித், சூர்யா, விக்ரம், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போன்றோர் தங்களது வாக்குகளை தொகுதிக்குட்பட்ட பகுதிக்கு சென்று பதிவு செய்தனர். மேலும் தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் அசம்பாவிதங்களும் நடந்தது. அதிகாரிகள் கவனமாக கண்காணித்து நடவடிக்கை எடுத்தனர். நிலையில் தமிழகத்தில் ஒரே கட்டமாக  வாக்குவாக்குப்பதிவு முடிந்த நிலையில் வாக்கு இயந்திரங்களுக்கு சீல் வைக்கும் பணி தொடங்கப்பட்டது. வாக்கு நிலையங்களில் இயந்திரங்களுக்கு சீல் வைக்கும் பணியும் நடைபெற்றுகிறது.

 தமிழக மட்டுமின்றி சட்டமன்ற தேர்தல் புதுச்சேரி மற்றும் கேரளாவிலும் நடைபெற்றது. புதுச்சேரியில் 30 தொகுதி உள்ளன. இந்த 30 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று தற்போது சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது. கேரளாவிலும் வாக்குப்பதிவு நிறைவேற்ற நிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் சீல் வைக்கும் பணி தொடங்குகிறது. மேலும் கேரளாவில் 140 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

From around the web