அதிமுகவை பாஜக கட்சி விழுங்கிவிடும் கூறும் விசிக!

அதிமுக மற்றும் பாஜக இடையே கூட்டணி பற்றி விமர்சிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருமாவளவன்!
 

சட்டமன்ற தேர்தல் உள்ளநிலையில் அதற்காக தமிழகத்தில் பல்வேறு கட்சிகள் பல கட்சிகளுடன் கூட்டணி வைத்து சட்டமன்றத் தேர்தலை சந்திக்க உள்ளது.தமிழகத்தில் மொத்தம் 234 தொகுதிகள் உள்ளன. பல கூட்டணிகள் கலந்துள்ள நிலையில் தமிழகத்தில் ஆளும் கட்சியாக அதிமுக கட்சி பாஜக கூட்டணி வைத்துள்ளது. அதற்காக பாஜகவிற்கு 20 தொகுதிகளை அதிமுக தரப்பிலிருந்து ஒதுக்கப்பட்டது. மேலும் ஒரு மக்களவை சீட்டும் அதிமுக தரப்பிலிருந்து பாஜகவிற்கு ஒதுக்கப்பட்டது.

thirumavalavan

பாஜக மாநில தலைவர் முருகன் தாராபுரம் தொகுதியிலும், ஆயிரம்விளக்கு தொகுதியில் பாஜக சார்பில் நடிகை குஷ்புவும் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை தாக்கல் செய்துவிட்டனர்.இந்நிலையில் தமிழகத்தில் மிகவும் வலிமையான எதிர்க் கட்சியாக உள்ள திமுக கட்சி கூட்டணியாக காங்கிரஸ் கட்சியும் மதிமுகவும் வைத்துள்ளது. மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சியுடன் கூட்டணி திமுக ஆட்சி வைத்து சட்டமன்ற தேர்தலை சந்திக்க உள்ளது.

அதற்காக விடுதலை சிறுத்தைகள்  கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இந்நிலையில் விடுதலை கட்சியின் திருமாவளவன் தற்போது அதிமுக மற்றும் பாஜக கூட்டணி குறித்து விமர்சனம் செய்துள்ளார். மேலும் அவர் சட்டமன்ற தேர்தலுக்கு பின் அதிமுகவை பாஜக விழுங்கி விடும் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும் அதிமுகவுக்கு வாக்களித்து பாஜகவில் சேரும் எனவும் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

From around the web