சீனாவின் அடுத்த அட்டாக்: வைரஸ்கள் உடன் வெளியாகும் மலிவு விலை மொபைல் போன்கள்

சீனாவில் இருந்து தயாராகும் பொருட்களுக்கு இந்தியா இறக்குமதி செய்ய தடை விதித்துள்ளது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்தியா உள்பட ஒருசில எதிரி நாடுகளை பழிவாங்குவதற்காக வைரஸ்கள் உடன் கூடிய மொபைல் போன்களை சீன நிறுவனங்கள் வெளியிட்டு வருவதாகவும் இந்த மொபைல் போன்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் அவர்கள் தங்கள் டேட்டாக்களையும், பணத்தையும் திருடும் வகையில் ஆபத்து நிறைந்ததாக உள்ளதாகவும் தகவல்கள் வெளி வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது சீன நிறுவனத்தின் மொபைல் போன் டெக்னோ டபிள்யூ 2’
 

சீனாவின் அடுத்த அட்டாக்: வைரஸ்கள் உடன் வெளியாகும் மலிவு விலை மொபைல் போன்கள்

சீனாவில் இருந்து தயாராகும் பொருட்களுக்கு இந்தியா இறக்குமதி செய்ய தடை விதித்துள்ளது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்தியா உள்பட ஒருசில எதிரி நாடுகளை பழிவாங்குவதற்காக வைரஸ்கள் உடன் கூடிய மொபைல் போன்களை சீன நிறுவனங்கள் வெளியிட்டு வருவதாகவும் இந்த மொபைல் போன்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் அவர்கள் தங்கள் டேட்டாக்களையும், பணத்தையும் திருடும் வகையில் ஆபத்து நிறைந்ததாக உள்ளதாகவும் தகவல்கள் வெளி வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

சீன நிறுவனத்தின் மொபைல் போன் டெக்னோ டபிள்யூ 2’ என்ற போனில் இரண்டு விதமான வைரஸ்கள் இன்ஸ்டால் செய்யப்பட்டு விற்பனையாகி வருவதாக கூறப்படுகிறது. இந்தியா மற்றும் ஆப்பிரிக்காவில் இந்த மாடல் மொபைல் போன்கள் விற்பனைக்கு உள்ளதாகவும் இது குறித்து ஆய்வு நடத்திய நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது

இந்த மொபைல் போன்களை பயன்படுத்துவோர் அவர்களுக்கே தெரியாமல் அவர்களுடைய டேட்டாக்கள் திருடப்படுவதும், அதுமட்டுமன்றி அவர்களுடைய வங்கியில் உள்ள பணம் திருடுவதற்கு ஹேக்கர்கள் இந்த வைரஸ்களை பயன்படுத்துவதாகவும் கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது

ஆனால் இது குறித்து டெக்னோ டபிள்யூ 2 நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது. தங்களது மொபைல் போனில் எந்தவிதமான வைரஸ்களும் இன்ஸ்டால் செய்யவில்லை என்றும் இது வதந்தி என்றும் கூறி வருகிறது. ஆனால் இதனை ஆய்வு செய்த ஆய்வாளர்கள் வைரஸ்களுடன் கூடிய இந்த மொபைல் போனைப் பயன்படுத்துவது மிகவும் ஆபத்து என்று கூறி வருகின்றனர்

From around the web