விவசாயிகள் போராட்டத்தில் வன்முறை: பிரதமர் மோடிக்கு நெருக்கமான நடிகர் தலைமறைவு

கடந்த இரண்டு மாதங்களாக மத்திய அரசின் விவசாய மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வட மாநில விவசாயிகள் போராட்டம் செய்து வருகின்றனர். அதன் உச்சகட்டமாக கடந்த குடியரசு தின நிகழ்வின் போது டிராக்டர்கள் ஊர்வலம் நடந்தது என்பதும் அதில் விவசாயிகள் செங்கோட்டையை நோக்கி சென்று விவசாயிகள் சங்கத்தின் கொடியை ஏற்றினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. செங்கோட்டையில் கொடியேற்ற முக்கிய அம்சமாக இருந்தவர் நடிகர் தீப்சித்து என்று கூறப்படுகிறது
இந்த நிலையில் டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் வன்முறை தூண்டியதாக தீப்சித்து மீது குற்றம் சாட்டப்பட்டு அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக தகவல் வெளிவந்தது. இந்த நிலையில் திடீரென அவர் தலைமறைவாகி உள்ளதாக கூறப்படுகிறது.
பிரதமர் மோடியுடன் நெருங்கிய தொடர்புடையவர் தீப்சித்து என்றும் இவர் பிரதமருடன் இணைந்து எடுத்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் தீப்சித்து போராட்டத்தில் ஊடுருவி போராட்டத்தை திசை திருப்பியதாகவும் விவசாயிகள் புகார் கூறியுள்ளனர். இந்த நிலையில் தலைமறைவாகியுள்ள தீப்சித்துவை கண்டுபிடிக்கும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்