நான்காண்டுகள் சிறை, 3 லட்சம் அபராதம் விழுப்புரம் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு!

அதிமுகவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பரமசிவனுக்கு நான்காண்டுகள் சிறை மற்றும் மூன்று லட்ச ரூபாய் அபராதம் விதித்தது விழுப்புரம் மாவட்ட நீதிமன்றம்!
 

சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அதற்காக தமிழகத்தில் பல்வேறு உத்தரவு பிறப்பித்து வருகிறது. மேலும் தமிழகத்தில் தேர்தல் தலைமை அதிகாரியாக இருப்பவர் சத்யபிரதா சாகு.அவர் சில தினங்களாக செய்தியாளர்  சந்தித்து பல்வேறு தகவல்களை வெளியிட்டு வருகிறார். மேலும் தமிழகத்தில் தேர்தல் பறக்கும் படையினர் பல பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். மேலும் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்படும் தங்க நகைகளையும், பணத்தையும் பறிமுதல் செய்து கொள்கின்றனர்.

paramasivam

அதிமுக கட்சியானது தன்னுடன் கூட்டணியாக பாஜக ,பாமக கட்சிகளை வைத்து சட்டமன்ற தேர்தலை சந்திக்க உள்ளன. தற்போது அதிமுகவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருக்கு நான்காண்டுகள் சிறை மற்றும் மூன்று லட்ச ரூபாய் அபராதத்தை விழுப்புரம் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 1991 இல் சின்னசேலம் பகுதியில் சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார் அதிமுகவின் பரமசிவம்.

அவருக்கு சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. விழுப்புரம் நீதிமன்றம். வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.இதனால் அவருக்கு 4 ஆண்டுகள் சிறை மற்றும் மூன்று லட்ச ரூபாய் அபராதத்தை விழுப்புரம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

From around the web