நீண்ட இடைவேளைக்கு பிறகு தேர்தல் பிரச்சாரம் செய்த விஜயகாந்த்

தேமுதிகவை கடந்த 2005ம் ஆண்டு மதுரையில் ஆரம்பித்தவர் நடிகர் விஜயகாந்த். அதன் பிறகு சில படங்களில் நடித்த விஜயகாந்த் சிறிது சிறிதாக படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்டார். தீவிர அரசியல் களம் கண்ட விஜயகாந்த் எம்.எல்.ஏவாக ஆகி 2011 தேர்தலில் அதிமுகவுக்கு அடுத்தபடியாக அதிக இடங்களை வென்று எதிர்க்கட்சிதலைவரும் ஆனார். அரசியலில் முன்னாள் முதல்வர் ஜெவையும் கலைஞரையும் எதிர்த்து கடுமையாக வாதங்களை முன் வைத்தார். எனினும் அவர் அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்த அளவு திமுகவுடன் சேரவே இல்லை. கடும்
 

தேமுதிகவை கடந்த 2005ம் ஆண்டு மதுரையில் ஆரம்பித்தவர் நடிகர் விஜயகாந்த். அதன் பிறகு சில படங்களில் நடித்த விஜயகாந்த் சிறிது சிறிதாக படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்டார்.

நீண்ட இடைவேளைக்கு பிறகு தேர்தல் பிரச்சாரம் செய்த விஜயகாந்த்

தீவிர அரசியல் களம் கண்ட விஜயகாந்த் எம்.எல்.ஏவாக ஆகி 2011 தேர்தலில் அதிமுகவுக்கு அடுத்தபடியாக அதிக இடங்களை வென்று எதிர்க்கட்சிதலைவரும் ஆனார்.

அரசியலில் முன்னாள் முதல்வர் ஜெவையும் கலைஞரையும் எதிர்த்து கடுமையாக வாதங்களை முன் வைத்தார். எனினும் அவர் அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்த அளவு திமுகவுடன் சேரவே இல்லை.

கடும் உடல் நலிவுற்று சரியாக பேச முடியாத நிலையில் இருந்த விஜயகாந்த் கடந்த ஆண்டு இறுதியில் அமெரிக்காவுக்கு மருத்துவத்திற்காக சென்றார். அங்கு அவருக்குரிய சிகிச்சைகள் முடிந்து இரண்டு மாதம் முன் சென்னை திரும்பினாலும் கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலையை அடைகிறார். முன்பு போல் பேச முடியவில்லை என்றாலும் தேர்தல் பிரச்சாரம் செய்ய விஜயகாந்த் வரவில்லை அவருக்கு உடல் நிலை சரியில்லை என்ற காரணத்திற்காக நீண்ட இடைவேளைக்கு பிறகு விஜயகாந்த் பேசி இருக்கிறார்.

அதுவும் தாங்கள் போட்டியிடும் தொகுதிகளின் விவரங்களோடு அவர் பேசியது அவரது பேஸ்புக் மற்றும் டுவிட்டர் பக்கங்களில் வெளிவந்துள்ளது.

மிகவும் சிரமப்பட்டு பேசுவதாக அந்த வீடியோ வந்துள்ளது. தாங்கள் போட்டி இடும் தொகுதிகளில் தங்கள் கட்சிக்கு வாக்களிக்குமாறு விஜயகாந்த் மனமுருக அதில் கேட்டுள்ளார்.

From around the web