அமைச்சர் விஜயபாஸ்கர் மருத்துவர்களுக்கு இறுதி எச்சரிக்கை

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து நேற்று செய்தியாளர்களை சந்தித்த விஜயபாஸ்கர் மருத்துவர்கள் அனைவரும் இன்று மதியம் பணிக்கு திரும்பவில்லை என்றால் அவை காலிப்பணியிடங்களாக அறிவிக்கப்பட்டு வேறு நபர்கள் நியமிக்கப்படுவார்கள் என கூறி இருந்தார். இந்நிலையில் பணிக்கு திரும்பாத மருத்துவர்கள் 5 பேர் இன்று பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள். மேலும் செய்தியாளர்களை சற்று முன் சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அனைவரும் இன்று மதியம் 2மணிக்குள் பணிக்கு திரும்ப வேண்டும்
 

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து நேற்று செய்தியாளர்களை சந்தித்த விஜயபாஸ்கர் மருத்துவர்கள் அனைவரும் இன்று மதியம் பணிக்கு திரும்பவில்லை என்றால் அவை காலிப்பணியிடங்களாக அறிவிக்கப்பட்டு வேறு நபர்கள் நியமிக்கப்படுவார்கள் என கூறி இருந்தார்.

அமைச்சர் விஜயபாஸ்கர் மருத்துவர்களுக்கு இறுதி எச்சரிக்கை

இந்நிலையில் பணிக்கு திரும்பாத மருத்துவர்கள் 5 பேர் இன்று பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள்.

மேலும் செய்தியாளர்களை சற்று முன் சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அனைவரும் இன்று மதியம் 2மணிக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் இல்லை எனில் மாலை 6 மணிக்குள் பணியிடங்கள் காலிப்பணியிடங்களாக கருதப்பட்டுவேறு நபர்கள் நியமிக்கப்படுவார்கள் என உறுதியாக கூறியுள்ளார் அமைச்சர் விஜயபாஸ்கர்.

எல்லா துறையையும் விட இந்த மருத்துவத்துறைக்குத்தான் அதிகம் நிதி ஒதுக்கப்படுகிறது. அதற்குதான் முதல்வர் அதிக கவனம் எடுத்துக்கொள்கிறார் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

From around the web