கனவுகளுடன் சென்னை வந்தார், கனவுகள் நிறைவேறியபின் சொந்த ஊருக்கு சென்றார்: வசந்தகுமார் குறித்து மகன் டுவீட்

50 வருடங்களுக்கு முன்பு எனது தந்தை வசந்தகுமார் அவர்கள் 20 வயதாக இருக்கும் போது சென்னைக்கு பல்வேறு கனவுகளுடன் வந்தார். இந்த 50 வருடத்தில் அவர் கண்ட கனவுகள் அனைத்தும் நிறைவேறிவிட்டதை அடுத்து அவர் தனது பயணத்தை முடித்துக் கொண்டு மீண்டும் சொந்த ஊரான கிராமத்திற்கு சென்று அவர் ஆழ்ந்த ஓய்வில் இருக்கிறார். அவரது ஆத்மா சாந்தியடைய நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம். எங்களது தந்தைக்காக பிரார்த்தனை செய்த, இரங்கல் தெரிவித்த அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்’
 
கனவுகளுடன் சென்னை வந்தார், கனவுகள் நிறைவேறியபின் சொந்த ஊருக்கு சென்றார்: வசந்தகுமார் குறித்து மகன் டுவீட்

50 வருடங்களுக்கு முன்பு எனது தந்தை வசந்தகுமார் அவர்கள் 20 வயதாக இருக்கும் போது சென்னைக்கு பல்வேறு கனவுகளுடன் வந்தார். இந்த 50 வருடத்தில் அவர் கண்ட கனவுகள் அனைத்தும் நிறைவேறிவிட்டதை அடுத்து அவர் தனது பயணத்தை முடித்துக் கொண்டு மீண்டும் சொந்த ஊரான கிராமத்திற்கு சென்று அவர் ஆழ்ந்த ஓய்வில் இருக்கிறார். அவரது ஆத்மா சாந்தியடைய நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம். எங்களது தந்தைக்காக பிரார்த்தனை செய்த, இரங்கல் தெரிவித்த அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்தகுமார் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்

மேலும் சென்னைக்கு வந்த புதிதில் காமராஜருடன் வசந்தகுமார் எடுத்து கொண்ட புகைப்படத்தையும் அவர் பதிவு செய்துள்ளார் இளமைத் தோற்றத்துடன் காமராஜருடன் வசந்தகுமார் இருக்கும் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது

20 வயதில் சென்னை வந்து எந்தவித முதலீடும் இல்லாமல் நண்பர்களின் உதவியால் ஒரு சின்ன கடை வைத்து, அந்த கடையை தனது உழைப்பாலும், நாணயத்தாலும் வியாபார திறமையாலும் இன்று பல கோடிக்கு அதிபதியாகிய வசந்தகுமாரின் இந்த நிலையில் வியாபாரத்தில் அவர் காட்டிய நேர்மையே காரணம் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web