விஜய் மக்கள் இயக்கம்: புதிய நிர்வாகிகள் பட்டியல்!

 

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தளபதி விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் அவர்கள் திடீரென விஜய் பெயரில் அரசியல் கட்சி ஒன்று ஆரம்பிப்பதாக அறிவித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

அந்த கட்சிக்கும் தனக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை என்றும் தனது தந்தையின் கட்சியில் தனது ரசிகர்கள் யாரும் சேர வேண்டாம் என்றும் விஜய் அறிக்கை விட்டிருந்தார். அதன் பின்னர்  தந்தை மகன் இருவருக்கும் இடையே பெரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக செய்திகள் வெளியானது 

இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக விஜய் தனது விஜய் மக்கள் இயக்கம் நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை செய்து வருகிறார். இந்த ஆலோசனையில் அவர் அனைத்து மாவட்டத்திற்கும் புதிய நிர்வாகிகளை தேர்வு செய்யப் போவதாக அறிவித்து இருப்பதாக செய்திகள் வெளியானது 

vijay

அதன்படி முதல்கட்டமாக மதுரை மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தின் புதிய நிர்வாகிகள் பட்டியல் வெளியாகியுள்ளது. அதன் விபரம் பின்வருமாறு:

பொறுப்பாளர் மற்றும் மாவட்ட தலைவர் தெற்கு: தங்கபாண்டி

மாவட்ட தலைவர் (வடக்கு): கல்லணை

இளைஞரணி தலைவர் (தெற்கு புறநகர்): சதீஷ்குமார்

இளைஞரணி தலைவர் (தெற்கு மாநகர் ): வெற்றிவேல்

தொண்டரணி தலைவர் (தெற்கு மாநகர் ): சிவா

தொண்டரணி தலைவர் (தெற்கு புறநகர்): மருதுபாண்டி

தொண்டரணி தலைவர் ( வடக்கு மாநகர்: பாலாஜி

தொண்டரணி தலைவர் ( வடக்கு புறநகர்): பாண்டி

மாணவரணி தலைவர் (தெற்கு மாநகர் ): ஆனந்த்

மாணவரணி தலைவர் (தெற்கு புறநகர்): கணேஷ்குமார்

மாணவரணி தலைவர் ( வடக்கு மாநகர் ): முத்துபாண்டி

மாணவரணி தலைவர் ( வடக்கு புறநகர்): விஷால்

From around the web