விடிய விடிய மழை "கன்னியாகுமரியில்"; விரைந்து நிரம்பிய அணைகள்!

கன்னியாகுமரியில் இரவு முழுவதும் விடிய விடிய மழை பெய்து அங்குள்ள பகுதிகளில் உள்ள குளங்கள் அணைகள் வேகமாக நிரம்புகின்றன!
 
kaniyakumari

தமிழகத்தில் ஏன் இந்தியாவிலேயே தென் கடைசி மாவட்டமாக காணப்படுவது கன்யாகுமரி தான். இந்த கன்னியாகுமரி மாவட்டம் ஆனது பல்வேறு சிறப்பு பகுதிகளையும் சிறப்பம்சங்களையும் பெற்றுள்ளன. மேலும் இந்த கன்னியாகுமரியில் அரபிக்கடல் வங்கக்கடல் இந்திய பெருங்கடல் ஆகிய மூன்று கடல்களும் ஒரே நேரத்தில் சங்கமிக்கும் பூமியாகவும் காணப்படுகிறது. இதனால் இதனை முக்கடல் சந்திக்கும் பூமி என்றும் அழைப்பர். மேலும் இங்குள்ள திருவள்ளுவர் சிலையும் விவேகானந்த மண்டபமும் அனைவரின் பார்வையும் ஈர்க்கும் விதத்தில் உள்ளன அதுவும் குறிப்பாக வெளிநாட்டு சுற்றுலா விரும்பிகளின் மிகப்பெரிய சுற்றுலா தளமாகவும் இந்த கன்னியாகுமரி உள்ளது.rain

மேலும் இங்குள்ள தக்கலை நாகர்கோவில் போன்ற பகுதிகளில் எப்போதுமே குளிர்ந்த  வானிலை நிலவுவதால் இங்குள்ள மக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். இத்தகைய சிறந்த  பூமியான கன்னியாகுமரியில் நேற்று இரவு முழுவதும் மழை பெய்து வருகிறது. மேலும் இந்த மழையானது விடிய விடிய பெய்த தாகவும் கூறப்படுகிறது. இதனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பார்வதிபுரம் போன்ற பகுதிகளில் உள்ள சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல திரண்டு ஓடியது.

மேலும் இந்த விடிய விடிய பெய்த மழையால் அங்குள்ள நீர் நிலைகள் குளங்கள் அணைகள் போன்றவை மிகவும் வேகமாக நிரம்பி வருகின்றன.இதனால் அங்குள்ள விவசாயிகள் மிகவும் சந்தோஷத்தில் உள்ளனர்.

From around the web