சென்னையில் விடிய விடிய கனமழை: 3 ஆண்டுகளுக்கு பின் அதிகமழை

 

சென்னையில் நேற்று நள்ளிரவு 2 மணி முதல் தற்போது வரை விடிய விடிய கனமழை பெய்து வருவதால் பெரும்பாலான சாலைகளில் மழை நீர் ஓடுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர் 

சென்னையிலுள்ள அடையாறு, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை, எழும்பூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருவதன் காரணமாக சாலைகளில் மூன்று அடிக்குமேல் மழைநீர் தேங்கியுள்ளது 

சென்னை அண்ணா சதுக்கம் அருகே மூன்று அடிக்கும் மேல் மழை நீர் தேங்கி உள்ளதால் அந்த பகுதியில் செல்லும் வாகனங்கள் தத்தளித்து வருகின்றனர். மேலும் கடந்த 2017 ஆம் ஆண்டுக்கு பின்னர் சென்னையில் ஒரே நாளில் 100 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் சென்னையில் மீண்டும் கனமழை பெய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தாமதமாக தொடங்கினாலும் தொடங்கிய இரண்டாவது நாளே கனமழை பெய்து இருப்பது ஒரு பக்கம் மகிழ்ச்சி அளிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் தேங்கியிருக்கும் மழைநீரை அப்புறப்படுத்த மாநகராட்சி அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

From around the web