விடிய விடிய தர்ணா செய்த எம்பிக்களுக்கு டீ கொண்டு வந்த மாநிலங்களவை துணைத் தலைவர்

 

சமீபத்தில் மாநிலங்களவையில் விவசாய மசோதாக்கள் தாக்கல் செய்தபோது எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர் என்பதும் இதனை அடுத்து மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு அவர்கள் அமளியில் ஈடுபட்ட 8 எம்பிகளை சஸ்பெண்ட் செய்தார் என்பதும் தெரிந்தது 

இந்த நிலையில் சஸ்பெண்ட் முடிவை ஏற்க மறுத்த எம்பிக்கள் மீண்டும் அவைக்கு வந்தனர் என்பதும் இருப்பினும் அவர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது, இந்த நிலையில் தங்களது சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாராளுமன்றம் முன்பு 8 எம்பிக்களும் தர்ணா செய்து வருகின்றனர் 

நேற்று இரவு விடிய விடிய அவர்கள் பாராளுமன்றம் முன்பு உட்கார்ந்து தர்ணா செய்து கொண்டிருந்தார்கள் என்பதும் இதனையடுத்து இன்று காலை மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் என்பவர் தர்ணா செய்த எம்பிக்களுக்கு டீ கொண்டு வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது 

ஆனால் ஹரிவன்ஷ் கொண்டு வந்த டீயை சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்பிக்கள் வாங்க மறுத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மனிதாபிமான அடிப்படையில் தான் டீ கொண்டு வந்ததாகவும் ஆனால் அதனை ஏற்க மறுத்து விட்டதாகவும் ஹரிவன்ஷ் தரப்பில் கூறப்பட்டுள்ளது பாராளுமன்றம் முன்பு மாநிலங்களவை எம்பி க்கள் 8 பேர் விடிய விடிய தர்ணா செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

From around the web