அதிரும் தமிழகம்! அடுத்த மூன்று மணி நேரத்திற்கு கொட்டப் போகுது மழை!

தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 12 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது!
 
அதிரும் தமிழகம்! அடுத்த மூன்று மணி நேரத்திற்கு கொட்டப் போகுது மழை!

மக்கள் மத்தியில் கோடைகாலம் என்றாலே அனைவருக்கும் நினைவு வருவது மே மாதம்தான். இந்த மே மாதம் தொடங்க இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் தமிழகத்தில் உள்ள பல பகுதிகளில் வெயிலின் தாக்கம் அது மிகவும் உயர்ந்துள்ளது. மேலும் ஒரு சில பகுதிகளில் இயல்பு நிலையை விட தற்போது வெப்பநிலை அதிகரித்துள்ளது மிகுந்த எரிச்சலை உண்டாக்கி உள்ளது. மேலும் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கோடை காலம் தொடங்கும் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் என்ற அபாய நிலையும் காணப்படும்.

weather

 இன்று காலை சென்னை வானிலை ஆய்வு மையமானது தமிழகத்தில் சென்னை காரைக்கால் புதுச்சேரி போன்ற பகுதிகளிலும் 22 மாவட்டங்களிலும் இயல்பு வெப்பநிலையானது 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் என்று கூறியிருந்தது. ஆனால் தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் சில  தகவல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது. அதன்படி தமிழகத்தின் கடலோர மாவட்டமான தூத்துக்குடி மற்றும் தென்காசி உள்பட 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

மேற்கே உள்ள நீலகிரி ஈரோடு சேலம் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது. நாமக்கல் கன்னியாகுமரி மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறியது. மேலும் கோவை கள்ளக்குறிச்சி பெரம்பலூர் திருவண்ணாமலை திருநெல்வேலியிலும் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும் இப்பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது தகவல் வெளியானது.

From around the web