வெயிலில் முதலிடத்தில் வேலூர்!! என்னப்பா சொல்றீங்க ஒரே நாள்ல "105 டிகிரியா"!!

வேலூரில் இன்று அதிகபட்சமாக 105 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் சுட்டெரித்தது!
 
vellore

தற்போது நம் தமிழகத்தில் கோடை காலம் நிலவுகிறது. இதனால் பல பகுதிகளில் வெப்ப நிலையானது இயல்பைவிட அதிகமாக காணப்படுகிறது. ஒரு சில பகுதிகளில் வெளியே செல்ல முடியாத அளவிற்கு வெயில் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இந்த நிலையில் நம் தமிழகத்தில் இன்னும் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் காலையிலேயே கூறியிருந்தது, அதுவும் தமிழகத்தில் இயல்பை விட வெப்பநிலையானது 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அளவிற்கு உயரும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.sun

மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் கூறியுள்ளது. காரணம் என்னவெனில் கடலில் காற்றானது 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் தற்போது முதலிடத்தில் உள்ளது. வேலூர் அதன்படி தமிழகத்தில் இன்று ஒரே நாளில் அதிகபட்சமாக வேலூர் மாவட்டத்தில் 105 டிகிரி செல்சியஸ் பாரன்ஹீட் வெயில் சுட்டெரித்தது என்று கூறப்படுகிறது.

மேலும் வேலூர் மாவட்டமானது தமிழகத்தில் வட மாவட்டங்களில் மிகவும் பெயர் பெற்ற மாவட்டம் என்பதால் அந்த மாவட்டத்தில் கோடை காலம் ஆரம்பித்து விட்டால் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதோடு மட்டுமின்றி பல பகுதிகளில் குடிநீர் பற்றாக்குறையும் அதிகமாக நிலவும் என்பதால் அதில் வாழும் மக்கள் மிகுந்த அச்சத்துடன் உள்ளனர்.

இதனால் தமிழகத்தில் பெரும்பாலும் கோடை காலம் தொடங்கினால் வட தமிழகம் முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படும் என்பது தவிர்க்க முடியாத உண்மை என்பதால் தற்போது வேலூர் மாவட்டத்தில் 105 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது சாதாரணமாக ஒன்றாக பார்க்கப்படுகிறது.

From around the web