வட தமிழகத்தை வறுத்தெடுக்கும் வெயில்! பலத்த காற்று வீசும்!

அடுத்த 24 மணி நேரத்தில் வட தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது!
 
sun

தமிழகத்தில் தற்போது கோடைகாலம் கிறது. இதனால் பல பகுதிகளில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இதில் ஒரு சில பகுதிகளில் வெளியே செல்ல முடியாத அளவிற்கு கோடையின் உஷ்ணமானது அதிகமாக காணப்படுகிறது. இந்நிலையில் பல பகுதிகளில் கோடையின் வெப்பம் அதிகமாக காணப்பட்டது. அதுவும் குறிப்பாக இந்த கோடை வெப்பமானது இயல்பைவிட அதிகமாக காணப்பட்டது. இதனால் மக்கள் அனைவரும் மிகுந்த எரிச்சலையும் உஷ்ணத்தையும் உணர்கின்றனர்.fishers

இந்நிலையில் தற்போது மேலும் ஒரு எரிச்சலடையும் தகவல் ஒன்றை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதன்படி தமிழகத்தில் வெப்பநிலை இயல்பைவிட அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும் அடுத்த 24 மணி நேரத்திற்கு வட தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 2-3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும் தமிழக கடலோரப் பகுதியில் தென்மேற்கு வங்கக்கடல், மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

மேலும் இந்த பலத்த காற்று வீச வாய்ப்புள்ள பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.இதனால் இத்தகைய கோடைமழை பெய்தாலும் வட தமிழகத்தில் வெயிலின் உஷ்ணம் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது அங்கு வாழும் மக்களை மிகுந்த சோகத்தில் உள்ளாக்கியுள்ளது.

From around the web