விருதுநகரின் வீரசிவாஜி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறும் பிரபல நடிகை!

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆதரவாக தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட நடிகை விந்தியா!
 

சட்டமன்ற தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிப்புவெளியானது. தமிழகத்தில் அதிமுக, திமுக ,பாஜக ,பாமக போன்ற கட்சிகள் பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி வைத்து சட்டமன்ற தேர்தலை சந்திக்க உள்ளன. இதில் எந்த ஒரு கூட்டணியுமின்றி சட்டமன்ற தேர்தலை சந்திக்க உள்ள கட்சி நாம் தமிழர் கட்சி.

rajendra balaji

 117 ஆண் வேட்பாளர்களும் 117 பெண் வேட்பாளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்று அறிவித்த நிலையில் தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்றது.இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

எதிர்க்கட்சி தலைவர் மு க ஸ்டாலின் தமிழகத்தின் அனைத்து பகுதிக்கும் சென்று தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் அதிமுக சார்பில் ராஜபாளையம் தொகுதியில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில் அவருக்கு ஆதரவாக பிரபல நடிகை விந்தியா தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வந்தார்.விருதுநகரின் வீரசிவாஜி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவர் சினிமா பாணியில் பஞ்ச் டயலாக் விட்டார்.

From around the web