தமிழகத்தில் தற்போது முதலிடத்தில் உள்ளது வேதாரண்யம்!எதில முதலிடம்?

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மழைப்பொழிவு வேதாரண்யம் பகுதியில் பெய்ததாக கூறப்படுகிறது!
 
தமிழகத்தில் தற்போது முதலிடத்தில் உள்ளது வேதாரண்யம்!எதில முதலிடம்?

தமிழகத்தில் சில தினங்களுக்கு முன்பாக கோடை காலம் தொடங்கியது. இதனால் பல பகுதிகளில் வெளியே செல்ல முடியாத அளவிற்கு  வெயிலின் தாக்கம் அதிகம் காணப்படுகின்றது. மேலும் சில பகுதிகளில் வெயிலின் தாக்கம் மிகவும் சுட்டெரிக்கிறது. இதனால்மக்கள் மிகுந்த  அவதிக்குள்ளாகின்றனர். மேலும் பல பகுதிகளில் குடிநீர் பற்றாக்குறையும் இந்த வெயில் காலத்தில் தான் ஏற்படும். ஆனால் தற்போது தமிழகத்தில்ஒரு சில பகுதிகளில் மழையும் ஒரு சில பகுதிகளில் கன மழையும் பெய்து மக்களை இன்பத்திற்கு உள்ளாகி உள்ளது.rain

இந்த கோடை மழையால் மக்கள் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளனர். மேலும் ஒரு சில பகுதிகளில் குடிநீர் பற்றாக்குறையும் தீர்ந்து அப்பகுதியில் குளிர்ச்சியான நிலை காணப்படுகிறது. தமிழகத்தில் சில நாட்களாக பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. மேலும் இன்று காலை சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழக மக்களுக்கு குறிப்பாக தென் தமிழக மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் தகவலை கூறியுள்ளது. அதன்படி தென் தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது.

தமிழகத்தில் தற்போது அதிக மழைப்பொழிவு பெற்ற பகுதியாக வேதாரண்யம் உள்ளது. மேலும் இந்த வேதாரணியம் ஆனது நாகை மாவட்டத்தில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழகத்திலேயே அதிகபட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் இந்த வேதாரண்யத்தில் நான்கு சென்டிமீட்டர் மழை பொழிவு பெற்று முதலிடத்தில் உள்ளது. அதனை அடுத்து நிலக்கோட்டையில் 2 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கோவை சேலம் தேனி மாவட்டங்களில் லேசான மழை பதிவாகி உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

From around the web