பெரியார் பெயருக்காக போராடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி!

பெரியார் சாலை பெயர் மாற்றத்திற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக தகவல்!
 
பெரியார் பெயருக்காக போராடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் முன்னதாக அறிவித்திருந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்று முடிந்தது. எந்த சட்டமன்ற தேர்தல் இல்லாத அளவிற்கு இந்த சட்டமன்ற தேர்தலில் வேட்பாளர்கள் அதிகம் தங்களது வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளதாக கூறப்பட்டு இருந்தன. மேலும் தமிழகத்தில் பல கட்சிகள் பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி வைத்து சட்டமன்ற தேர்தலை சந்தித்தன. அதன் மத்தியில் தமிழகத்தில் மிகவும் வலிமையான எதிர்க்கட்சியாக உள்ள திமுக வானது தன்னுடன் கூட்டணியாக காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் வைத்து சட்டமன்ற தேர்தலை சந்தித்துள்ளன.

periyar

மேலும் திமுக சார்பில் முதல்வர் வேட்பாளராக அக்கட்சியின் தலைவர் மு க ஸ்டாலின் அறிவிக்கப்பட்டு அவர் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு உள்ளார். மேலும் திமுக, மதிமுக மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியினர் கூட்டணியாக வைத்து சட்டமன்றத்தில் சந்தித்துள்ளன. இவ்விரு கட்சிகளுக்கும் தலா 6 தொகுதிகள் ஒதுக்கீடு நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தேர்தல் சமயத்தில் போது தனது கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு இருந்தார்.

இந்நிலையில் தற்போது விடுதலை சிறுத்தை கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டதாக ,இந்த போராட்டமானது பெரியார் பெயர் மாற்றத்திற்காக நடைபெறுவதாக கூறப்படுகிறது. அதன்படி தமிழகத்தில் சில தினங்களுக்கு முன்பாக சென்னை ரிப்பன் சாலையில் உள்ள பெரியார் பெயரை மாற்றி கிராண்ட் வெஸ்டன் டிராக் ரோடு மாற்றப்பட்டன. இதற்கு பல தரப்பினரும் எதிர்ப்பு தவித்தனர். அதனை தொடர்ந்து தற்போது விடுதலை சிறுத்தை கட்சியினர் சென்னை பெரியமேட்டில் நெடுஞ்சாலைத் துறையை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அவர்கள் பெரியார் சிலை சாலை பெயரை கைவிட்டு கிராண்ட் வெஸ்டன் டிராக் ரோடு என்று பெயர்ப்பலகை வைத்ததற்கு கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

From around the web