அரக்கோணம் தொகுதியில் விசிக வேட்பாளர் கௌதம சன்னா வாக்கு சேகரிப்பு!

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட கௌதம சன்னா வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்!
 

சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அதற்காக தமிழகத்தில் ஏற்பாடுகள் மிகவும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேலும் தமிழகத்தில் தேர்தல் ஆணையம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது.தமிழகத்தில் மொத்தம் 234 தொகுதிகள் உள்ளன. இந்த 234 தொகுதிகளிலும் தேர்தல் பணி மிகவும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

thirumavalavan

 தமிழகத்தின் மிகவும் வலிமையான எதிர்க்கட்சியாக உள்ள திமுக கட்சியுடன் கூட்டணி ஆக காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் போன்ற தேசிய கட்சிகள் கூட்டணி வைத்து சட்டமன்ற தேர்தலை சந்திக்க உள்ளது. திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் உள்ளது. திமுக சார்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஆறு தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இந்நிலையில் இந்த 6 தொகுதிகளிலும் விடுதலை சிறுத்தை கட்சி  பானை சின்னத்தில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியானது.

மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அரக்கோணம் தொகுதியில் வேட்பாளராக கௌதம சன்னா அறிவிக்கப்பட்டார். இந்த வாகனத்தின் மூலம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மேலும் அவர் மங்கம்மா பேட்டை, தணிகை போளூர் போன்ற பகுதிகளில் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.. மேலும் அவர் ஒரு மாதத்தில் குடிநீர் பிரச்சினையை தீர்ப்போம் எனவும் கூறினார்  மேலும்  தணிகை போளூர் ரயில்வே சுரங்கப்பாதை அமைத்து தருவேன் எனவும் அவர் பிரச்சாரத்தில் கூறினார்.

From around the web