தி.நகரில் உள்ள இல்லத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது வசந்தகுமார் உடல்!

கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்பி வசந்தகுமார் அவர்கள் நேற்று உடல்நலக் கோளாறு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார் என்பது தெரிந்ததே இந்த நிலையில் மருத்துவமனை நடைமுறைகள் முடிந்து சற்று முன்னர் வசந்தகுமாரின் உடல் அவருடைய திநகர் இல்லத்துக்கு கொண்டு செல்லப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளது காங்கிரஸ் கொடி போர்த்தப்பட்டு அப்போலோ மருத்துவமனையிலிருந்து தி.நகரில் உள்ள இல்லத்திற்கு வசந்தகுமார் எம்.பி-யின் உடல் கண்ணாடி பேழையில் வைக்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்படுவதாக தகவல் வெளிவந்துள்ளது தி நகரில்
 

தி.நகரில் உள்ள இல்லத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது வசந்தகுமார் உடல்!

கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்பி வசந்தகுமார் அவர்கள் நேற்று உடல்நலக் கோளாறு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் மருத்துவமனை நடைமுறைகள் முடிந்து சற்று முன்னர் வசந்தகுமாரின் உடல் அவருடைய திநகர் இல்லத்துக்கு கொண்டு செல்லப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளது

காங்கிரஸ் கொடி போர்த்தப்பட்டு அப்போலோ மருத்துவமனையிலிருந்து தி.நகரில் உள்ள இல்லத்திற்கு வசந்தகுமார் எம்.பி-யின் உடல் கண்ணாடி பேழையில் வைக்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்படுவதாக தகவல் வெளிவந்துள்ளது

தி நகரில் உள்ள இல்லத்தில் அவரது உடல் பொதுமக்கள் மற்றும் காங்கிரஸ் தொண்டர்களின் அஞ்சலிக்காக வைக்கப்படும் என்றும் அதன் பின்னர் அவரது உடல் சொந்த ஊரான அகஸ்தீஸ்வரம் கொண்டு செல்லப்பட்டு அங்கு நாளை அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படும் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன

வசந்தகுமார் அவர்கள் கொரோனாவால் மரணம் அடையவில்லை என்றும் மரணமடைவதற்கு முன் அவருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனை நெகட்டிவ் ரிசல்ட் வந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே பொதுமக்கள் அஞ்சலி செலுத்தவும் இறுதி சடங்கில் கலந்து கொள்ளவும் எந்த பிரச்சனையும் இருக்காது என தெரியவந்துள்ளது

இதனையடுத்து வசந்தகுமாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த நீண்ட வரிசையில் தற்போது அவருடைய திநகர் இல்லத்தில் பொதுமக்கள் மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web