காத்திருப்போர் பட்டியலில் இருந்த வருண்குமார் சென்னைக்கு மாற்றம்!

ராமநாதபுரம் மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளராக பணிபுரிந்து கொண்டிருந்த வருண் குமார் ஐபிஎஸ் திடீரென காத்திருப்போர் பட்டியலுக்கு சமீபத்தில் மாற்றப்பட்டார். 

 

ராமநாதபுரம் மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளராக பணிபுரிந்து கொண்டிருந்த வருண் குமார் ஐபிஎஸ் திடீரென காத்திருப்போர் பட்டியலுக்கு சமீபத்தில் மாற்றப்பட்டார். 

இந்த நிலையில் தமிழகத்தில் தற்போது 12 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்துள்ளனர். இதில் ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்து அதன்பின் சமீபத்தில் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டிருந்த வருண்குமார் தற்போது சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளார்

சென்னையில் ஆட்டோமேஷன் மற்றும் கணினி மயமாக்கல் துறையின் கண்காணிப்பாளராக அவர் பொறுப்பேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 

ராமநாதபுரம் மாவட்டத்தில் அருண் பிரகாஷ் என்பவர் சமீபத்தில் கொலை செய்யப்பட்ட நிலையில் இந்த கொலை குறித்து வருண் குமார் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவு செய்திருந்தார். இந்த பதிவின் காரணமாக தான் அவர் ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பணியிலிருந்து மாற்றப்பட்டார் என்று கூறப்படுகிறது

From around the web