சிஸ்டம் மாறாவிட்டால் எதுவும் மாறாது: வருண்காந்தி

பாஜக எம்பியும் மத்திய அமைச்சர் மேனகா காந்தியின் மகனுமான வருண்காந்தி கோவையில் உள்ள தனியார் கல்லூரி சார்பில் நடைபெற்ற இளைஞர் கருத்தரங்கில் இன்று கலந்து கொண்டார். இந்த கருத்தரங்கில் வருண்காந்தி பேசியதாவது: ‘மாணவர்களின் திறனை மேம்படுத்தும் வகையில் கல்லூரிகள் செயல்பட வேண்டும். புத்தகங்களை தாண்டி இளைஞர்கள் தங்களது திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். இங்கு பெண்களுக்கான இட ஒதுக்கீடு மிகவும் குறைவாகவே உள்ளது. பாதுகாப்பு துறை மந்திரியாக இப்போது தான் ஒருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பாராளுமன்றத்தில் 11
 

பாஜக எம்பியும் மத்திய அமைச்சர் மேனகா காந்தியின் மகனுமான வருண்காந்தி கோவையில் உள்ள தனியார் கல்லூரி சார்பில் நடைபெற்ற இளைஞர் கருத்தரங்கில் இன்று கலந்து கொண்டார். இந்த கருத்தரங்கில் வருண்காந்தி பேசியதாவது: ‘மாணவர்களின் திறனை மேம்படுத்தும் வகையில் கல்லூரிகள் செயல்பட வேண்டும். புத்தகங்களை தாண்டி இளைஞர்கள் தங்களது திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

இங்கு பெண்களுக்கான இட ஒதுக்கீடு மிகவும் குறைவாகவே உள்ளது. பாதுகாப்பு துறை மந்திரியாக இப்போது தான் ஒருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பாராளுமன்றத்தில் 11 சதவீத பெண்களும், மாநில சட்டசபைகளில் 9 சதவீத பெண்களும் இடம் பெற்றுள்ளனர். 1950-ம் ஆண்டு முதல் சுப்ரீம் கோர்ட்டில் 6 பெண் நீதிபதிகளே நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அரசியல் சிஸ்டம் மாறாவிட்டால் எதுவுமே மாறாது. இதற்கு தீர்வு காண வேண்டிய கடமை இளைஞர்களின் கையில் உள்ளது’ என்று கூறினார்.

வருண்காந்தி சிஸ்டம் குறித்து கூறியபோது மாணவர்கள் திடீரென கைதட்டி ஆரவாரம் செய்தனர். ஏன் கைதட்டுகின்றனர் என்று வருண்காந்திக்கு புரியாவிட்டாலும், இதே கருத்தைத்தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த கடந்த டிசம்பர் மாதம் கூறினார் என்பதை கருத்தரங்கை ஏற்பாடு செய்த அனைவருக்கும் புரிந்திருக்கும்

From around the web