தற்போது நம் தமிழ்நாட்டிலேயே முதலிடத்தில் உள்ளது "வால்பாறை"!!

தமிழ்நாட்டில் அதிகபட்ச மழை பொழிவு வால்பாறை மற்றும் சின்னக்கல்லார் பகுதியில் பெய்துள்ளதாக பதிவாகியுள்ளது
 
valparai

தற்போது தமிழகத்தில் பல பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து கொண்டு வருகிறது. இது தமிழகத்தில் உள்ள மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் தற்போது வானிலை ஆய்வு மையம் தமிழகத்திற்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறியது மிகுந்த சந்தோசத்தை அளிப்பதாக காணப்படுகிறது. இது  தொடர்ந்து தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் தொடர்ச்சியாக ஆங்காங்கே மழை பெய்து கொண்டு வருகிறது.rain

இந்த நிலையில் தற்போது தமிழகத்தில் அதிகபட்ச மழை பதிவானது வால்பாறை பகுதியில் பெய்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வால்பாறையில் 4 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. வால்பாறை மட்டுமில்லாமல் சின்னக்கல்லார் பகுதியும் 4 சென்டி மீட்டர்  மழை பெற்றுள்ளது.

அதைத்தொடர்ந்து குழித்துறை அவலாஞ்சியில் தலா 3 சென்டி மீட்டர் மழையும் பூதபாண்டி பந்தலூரில் தலா இரண்டு சென்டி மீட்டர் மழையும் பெய்துள்ளது. சென்னை விமான நிலையம்,  ராதாபுரம், தொழுதூரில் தலா ஒரு சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளதாக வெளியாகியுள்ளது.

From around the web