கோரிக்கை வைக்கவும் உரிமை, நன்றி சொல்லவும் கடமை: வைரமுத்து

கோரிக்கை வைக்க எனக்கு உரிமை உள்ளது, அதே போல் கோரிக்கை நிறைவேற்றப்பட்டால் நன்றி சொல்ல வேண்டிய கடமையும் உள்ளது என்று கவியரசு வைரமுத்து தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார் கவியரசு வைரமுத்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் தனது டுவிட்டர் பக்கத்தில் மத்திய அரசின் மும்மொழிக் கொள்கையை தமிழக அரசு கடைபிடிக்க கூடாது என்றும் அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்திலிருந்து கடைபிடிக்கப்பட்டு வரும் இருமொழிக் கொள்கையை கடைபிடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்தார் இதனையடுத்து இன்று காலை
 

கோரிக்கை வைக்கவும் உரிமை, நன்றி சொல்லவும் கடமை: வைரமுத்து

கோரிக்கை வைக்க எனக்கு உரிமை உள்ளது, அதே போல் கோரிக்கை நிறைவேற்றப்பட்டால் நன்றி சொல்ல வேண்டிய கடமையும் உள்ளது என்று கவியரசு வைரமுத்து தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்

கவியரசு வைரமுத்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் தனது டுவிட்டர் பக்கத்தில் மத்திய அரசின் மும்மொழிக் கொள்கையை தமிழக அரசு கடைபிடிக்க கூடாது என்றும் அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்திலிருந்து கடைபிடிக்கப்பட்டு வரும் இருமொழிக் கொள்கையை கடைபிடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்தார்

இதனையடுத்து இன்று காலை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தமிழகத்தில் இரு மொழிக் கொள்கை தான் தமிழகத்தில் தொடர்ந்து கடைபிடிக்கப்படும் என்றும் மும்மொழிக் கொள்கை கடைபிடிக்கப்படாது என்றும் அவர் தெரிவித்திருந்தார்

இந்த நிலையில் தமிழக முதல்வரின் இந்த முடிவிற்கு நன்றி தெரிவித்த கவியரசு வைரமுத்து தனது ட்விட்டரில் கூறியிருப்பதாவது

இருமொழிக் கொள்கையில்
உறுதிகாட்டியிருக்கும்
தமிழ்நாட்டு முதலமைச்சர்
பழனிச்சாமியைப் பாராட்டுகிறேன்;
தமிழ் உணர்வாளர்கள் சார்பில்
நன்றி தெரிவிக்கிறேன்.
கோரிக்கை வைக்க உரிமையிருந்த எனக்கு
நன்றி சொல்லும் கடமையுமிருக்கிறது.

From around the web