யோகா இந்திக்கு மட்டுமே சொந்தமா? அல்லது இந்தியாவுக்கு இந்தி மட்டுமே சொந்தமா? வைரமுத்து கேள்வி

சில நாட்களாக ஆன்லைன் மூலம் யோகா பயிற்சி வகுப்புகள் நடந்து கொண்டிருந்த நிலையில் ஹிந்தி தெரியாதவர்கள் இந்த பயிற்சியில் இருந்து வெளியேறலாம் என மத்திய அமைச்சக செயலாளர் ஒருவர் தெரிவித்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது ஆகஸ்ட் 18-ஆம் தேதி முதல் 20ம் தேதி வரை ஆன்லைன் மூலம் யோகா நேச்சுரோபதி மருத்துவர்களுக்கான யோகா பயிற்சி நடைபெற்றது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த 37 பேர் உள்பட நாடு முழுவதும் 350 க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பங்கேற்றனர் இந்த நிகழ்ச்சியில்
 

யோகா இந்திக்கு மட்டுமே சொந்தமா? அல்லது இந்தியாவுக்கு இந்தி மட்டுமே சொந்தமா? வைரமுத்து கேள்வி

சில நாட்களாக ஆன்லைன் மூலம் யோகா பயிற்சி வகுப்புகள் நடந்து கொண்டிருந்த நிலையில் ஹிந்தி தெரியாதவர்கள் இந்த பயிற்சியில் இருந்து வெளியேறலாம் என மத்திய அமைச்சக செயலாளர் ஒருவர் தெரிவித்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

ஆகஸ்ட் 18-ஆம் தேதி முதல் 20ம் தேதி வரை ஆன்லைன் மூலம் யோகா நேச்சுரோபதி மருத்துவர்களுக்கான யோகா பயிற்சி நடைபெற்றது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த 37 பேர் உள்பட நாடு முழுவதும் 350 க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பங்கேற்றனர்

இந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சக செயலாளர் ராஜேஷ் கொடேஜா அவர்கள் ஹிந்தியில் பேசியுள்ளார் அப்போது அவரை ஆங்கிலத்தில் உரையாற்றுமாறு தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவர்கள் கோரிக்கை விடுத்தனர். தனக்கு ஆங்கிலம் சரளமாகப் பேசத் தெரியாது என்றும் ஹிந்தி தெரியாதவர்கள் பயிற்சியிலிருந்து தாராளமாக விலகிக் கொள்ளலாம் என்றும் ராஜேஷ் குமார் தெரிவித்துள்ளார். இது பெரும் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது

இந்த நிலையில் இதுகுறித்து கவியரசு வைரமுத்து தனது டுவிட்டரில் கூறியபோது, ‘இந்தி அறியாதார் யோகா பயிற்சியிலிருந்து வெளியேறலாம் என்று இந்திய அமைச்சகச் செயலாளர் அவமதித்திருப்பது அதிர்ச்சி தருகிறது. யோகா இந்திக்கு மட்டுமே சொந்தமா அல்லது இந்தியாவுக்கு இந்தி மட்டுமே சொந்தமா என்ற கேள்விகள் இதயத்தில் அறைவதை நிறுத்துங்கள் என்று கூறியுள்ளார்.

From around the web