வேல் யாத்திரைக்கு அனுமதி இல்லை: தடையை மீற பாஜக திட்டமா?

 

நவம்பர் ஆறாம் தேதி முதல் டிசம்பர் ஆறாம் தேதி வரை திருத்தணி முதல் திருச்செந்தூர் வரை வேல்யாத்திரை நடத்த பாஜக திட்டமிடப்பட்டிருந்தது. பாஜக தமிழக தலைவர் எல் முருகன், மத்திய அமைச்சர்கள் உள்பட பலர் இந்த யாத்திரையில் கலந்து கொள்ள உள்ளனர் 

நாளை இந்த யாத்திரையை தொடங்கவிருக்கும் நிலையில் திடீரென இந்த யாத்திரைக்கு அனுமதி வழங்க முடியாது என தமிழக அரசு தெரிவித்துள்ளது. பாஜக யாத்திரை தடை விதிக்க வேண்டும் என்று ஏற்கனவே பல்வேறு அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில் இதுகுறித்து வழக்கு ஒன்று நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் மனுதாரர், ‘ஊரடங்கு அமலில் உள்ள நேரத்தில் இந்த யாத்திரை நடந்தால் நோய் தொற்று பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும், யாத்திரை நிறைவு பெறும் நாள் டிசம்பர் 6 என்பது பாபர் மசூதி இடிப்பு தினம் என்பதால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் என சுட்டிக்காட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் பாஜகவின் வேல் யாத்திரைக்கு அனுமதி வழங்க கோரி தமிழக பாஜக தலைவர்கள் டிஜிபி அலுவலகத்தில் மனு அளித்தனர். இந்த மனுவுக்கு பதிலளித்த தமிழக அரசு கொரோனா காலத்தை கருத்தில்கொண்டு எந்தவித ஊர்வலமும் போராட்டமும் நடத்த அனுமதிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளது. வேல்யாத்திரைக்கு அனுமதி இல்லை என தமிழக அரசு கூறியதை அடுத்து, தடையை மீறி வேல் யாத்திரை நடைபெறுமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும் 
  

From around the web