முன்னர் வேண்டாம்; தற்போது திறக்கலாம் என்று கூறும் வைகோ!

ஆக்சிஜன்  உற்பத்திக்கு ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என்று கூறுகிறார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ!
 
முன்னர் வேண்டாம்; தற்போது திறக்கலாம் என்று கூறும் வைகோ!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல்  முன்னறிவித்த செய்திப்படி ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்றது. சட்டமன்றதேர்தல் பல கட்சிகள் பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தன. தமிழகத்தில் மிகவும் வலிமையான எதிர்க் கட்சியாக உள்ள திமுக மதிமுக போன்ற கட்சிகளை வைத்து சட்டமன்ற தேர்தலை சந்தித்தன. குறிப்பாக மதிமுக சட்டமன்றத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி வைத்து ஆறு தொகுதிகளில் களமிறங்கியது . அவற்றில் குறிப்பாக மதுரை தெற்கு தொகுதியில் திமுக களமிறங்கியது குறிப்பிடதக்கது, பொதுச் செயலாளராக உள்ளார் வைகோ. சில தினங்களாக தமிழகத்தில் ஆக்சிசன் பற்றாக்குறைக்கு ஆக்சிஜன் உற்பத்தி செய்ய ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக குரல் கொடுத்தார்.sterlite

மேலும் அவர் எக்காரணம் கொண்டும் திறக்க வேண்டாம் என்றும் கூறியுள்ளார். ஆனால் இன்று காலை தற்போது அவர் ஸ்டெர்லைட் ஆலையை ஆக்சிசன்  உற்பத்தி திறக்கலாம் என்று கூறியுள்ளார். மேலும் அரசின் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டு ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிசன்  உற்பத்தி அனுமதிக்கலாம் என்றும் கூறியுள்ளார். ஆனால் எக்காரணம் கொண்டும் ஸ்டெர்லைட் நிர்வாகத்துக்கு அனுமதி வழங்கக்கூடாது என்றும் அவர் திட்டவட்டமாக கூறியுள்ளார். மேலும்  பொதுத்துறை  நிறுவனங்களில் இருந்து பொறியாளர்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

மேலும் அவர் ஆக்சிசன்   உற்பத்தியை அங்குள்ள பொறியாளர்களை கொண்டு ஒப்பந்த அடிப்படையில் உற்பத்தி செய்ய அனுமதிக்கலாம் என்றும் ஆனால் எக்காரணம் கொண்டும் ஸ்டெர்லைட் ஆலையை நிர்வாகம் ஆக்சிசன்   உற்பத்தி செய்ய அனுமதிக்கக்கூடாது என்றும் கூறினார். மேலும் அவர் ஆக்சிசன்   தேவை என்பதுதான் அவசியம் தான் என்றும் கூறியுள்ளார்.

From around the web