தமிழகத்தில் 90 லட்சம் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு இல்லை-கூறும் வைகோ!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அதற்காக பல்வேறு கட்சிகள் பல கட்சிகளுடன் கூட்டணி உள்ளன. ஆளும் கட்சியான அதிமுக கட்சி கூட்டணியாக பாஜக கட்சியும் பாமக கட்சி வைத்துள்ளது. மேலும் எதிர்கட்சி திமுக கட்சி அதனுடன் கூட்டணியாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியையும், காங்கிரஸ் கட்சியையும் வைத்துள்ளது. மேலும் மதிமுக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் கூட்டணி வைத்துள்ளது.

அதற்காக திமுக தி 6 தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வழங்கியிருந்தது.இந்நிலையில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் தமிழகத்தின் பல பகுதிகளுக்கு சென்று தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் மதுரை தெற்கு தொகுதியை மதிமுக ஒதுக்கியது திமுக. மேலும் மதிமுக அத்தொகுதியில் பூமிநாதன் ஐ வேட்பாளராக நிறுத்தியது.
அவருக்கு ஆதரவாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அவர் திறந்த வாகனத்தின் மூலம் மதுரை தெற்கு தொகுதியில் உள்ள ஆழ்வார் புரத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறினார், தமிழகத்தில் 90 லட்சம் பட்டதாரிகள் வேலை வாய்ப்பு இல்லை என்று கூறினார். மேலும் மீனாட்சி அம்மன் கோவில் 4 கோபுரங்களில் தெற்கு கோபுரமே மிகவும் உயரமானது எனவும் கூறினார். அதேபோல மதுரை தெற்குத் தொகுதி பூமிநாதன் அதிக வாக்கு வித்தியாசத்தில் ஜெயிக்க வைக்க வேண்டும் எனவும் கூறினார்.