36 மாவட்டங்களில் தடுப்பூசிகள் தீர்ந்தன! சென்னையில் மட்டும் இன்னும் "1000" தடுப்பூசிகள்  உள்ளது!

தமிழகத்தில் உள்ள 36 மாவட்டங்களில் தற்போது கொரோனா தடுப்பூசிகள் முழுவதுமாகத் தீர்ந்ததாக தகவல் வெளியாகியுள்ளது
 
covishield

தற்போது நம் தமிழகத்தில் கொரோனா பாதிப்பானது படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால் தமிழக மக்களுக்கு ஓரளவு மகிழ்ச்சியைத் தருகிறது. இந்திய அளவில் தமிழகத்திலேயே கொரோனா அதிக பாதிப்பு உள்ளது என்பதும் தமிழகமே இந்தியாவில் முதலிடத்தில் உள்ளது என்பதும் ஓரளவு கசப்பான செய்தியாக காணப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா தடுப்பூசிகள் முகாம்கள் அமைக்கப்பட்டு தினந்தோறும் செலுத்தப்பட்டு வந்தது, மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக காணப்படுகிறது.subramanian

இந்நிலையில் ஹைதராபாத்தில் இருந்து தற்போது சென்னைக்கு கொரோனா தடுப்பூசி கொண்டுவரப்பட்டது என்ற தகவலும் வெளியானது. இந்நிலையில் தற்போது தமிழக மக்களுக்கு பேர் அதிர்ச்சியான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி தமிழகத்தில் உள்ள 36 மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி கையிருப்பு இல்லை என்று அமைச்சர்  கூறியுள்ளார். மேலும் சென்னையில் மட்டும் இன்னும் 1000 கொரோனா தடுப்பூசிகள் உள்ளன என்றும் அமைச்சர் பேட்டி அளித்துள்ளார்.

மேலும் ஜூன் மாதத்திற்கான கொரோனா தடுப்பு மருந்துகளை மத்திய அரசு அனுப்பினால் மட்டுமே தமிழகத்தில் இனி கொரோனா தடுப்பூசி செலுத்த முடியும் என்றும் அமைச்சர் தெள்ளத் தெளிவாக கூறியுள்ளார். மேலும் அரசு மருத்துவமனைகளில் 47 ஆயிரத்து 484 படுக்கை காலியாக உள்ளன என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் சென்னையில் பேட்டியளித்தார் .இதனால் தமிழகத்தில் வரும் நாட்களில் கொரோனா தடுப்பூசி பஞ்சம் ஏற்படும் என்று தற்போது தெரியவந்துள்ளது.

From around the web