தடுப்பூசி தட்டுப்பாடு தமிழகத்தில் அரசு மருத்துவமனையில் கொரோனா  தடுப்பூசி தட்டுப்பாடு!

மன்னார்குடி அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதாக தகவல்!
 
தடுப்பூசி தட்டுப்பாடு தமிழகத்தில் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு!

மக்கள் மத்தியில் மிகவும் உயிரைக் குடிக்கும் ஆட்கொல்லி நோயாக வளர்ந்துள்ளது கொரோனா. பாரபட்சம் இன்றி அனைத்து தரப்பு மக்களிடமும் கொரோனா வந்து பெரும் இன்னலை ஏற்படுத்தியுள்ளது. மேலும் முதன் முதலில் சீனாவில் உள்ள ஒரு நபருக்கு கண்டறியப்பட்டது. இது2019ஆம் ஆண்டு சீன நாட்டில் கண்டறியப்பட்டது. அதன் பின்னர் உலக நாடுகள் அனைத்திலும் இந்த கொரோனா நோயின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. 2020ஆம் ஆண்டில் இந்தியாவில் கொரோனா கண்டறியப்பட்டது.

corona

இதனால் இந்திய அரசு ஊரடங்குச் சட்டத்தை அமல்படுத்தியது, இறுதியில் கொரோனா  நோயின் தாக்கம் வலுவிழந்தது. ஆனால் இந்தியாவில் சில வாரங்களாக கொரோனா  நோயின் தாக்கம் ஆனது தற்போது வலுப்பெற்று மிகவும் வீரியமாக பரவுகிறது .குறிப்பாக இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா   கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அதிகமாக உள்ளது. மேலும் தமிழ் பேசும் நம் தமிழ்நாட்டிலும் நோய்த் தாக்கம் அதிகரித்துள்ளது. மேலும் சில விதிகளை தமிழக அரசு தரப்பு கூறியிருந்தனர்.

மேலும் மத்திய அரசு மூன்று நாட்களுக்கு திருவிழா என்று அறிவித்திருந்தது நிலையில் தற்போது தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் கொரோனா  தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. அதன்படி மன்னார்குடி அரசு மருத்துமனையில் கொரோனா  தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதாக தகவல். மேலும் பதினோராம் தேதி முதல் தடுப்பூசி மருந்து போடுவதற்கான திருவிழா அறிவித்திருந்த நிலையில் தற்போது அரசு மருத்துமனையில் கொரோனா தடுப்பூசி   தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும் இதனை மன்னார்குடியில் கொரோனா தடுப்பூசி  தட்டுப்பாடு நிலவுவதாக அப்பகுதி எம்எல்ஏ டிஆர்பி ராஜா புகார் அளித்துள்ளார்.

From around the web