கர்ப்பிணிப் பெண்களுக்கு தடுப்பூசி: ஐ.சி.எம்.ஆர் இயக்குனர் தகவல்

 
corona vaccine

இனி கர்ப்பிணிகளும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டதை அடுத்து விரைவில் கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி போடப்படும் என்று கூறப்படுகிறது

ஏற்கனவே முன்களப்பணியாளர்கள் உள்பட பொதுமக்கள் அனைவருக்கும் தற்போது தடுப்பூசி போடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது குறித்து ஆய்வு நடந்து வருவதாக ஐ.சி.எம்.ஆர் இயக்குனர் டாக்டர் பலராம் பார்கவா அவர்கள் ஏற்கனவே தெரிவித்திருந்தார்

இந்த நிலையில் தற்போது அவர் கூறிய தகவலின் படி கர்ப்பிணி பெண்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கான வழிகாட்டி நெறிமுறைகள் வெளியிடப் பட்டிருக்கின்றன. இதனை அடுத்து அந்த வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கர்ப்பிணி பெண்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என ஐ.சி.எம்.ஆர் இயக்குனர் தெரிவித்துள்ளார் 

அதேபோல் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது குறித்து ஆய்வுகள் நடைபெற்று வருவதாகவும் விரைவில் அதற்கான வழி காட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

From around the web