உஷாரய்யா உஷாரு தமிழகத்திற்கே  எச்சரிக்கை!அஞ்சு நாளைக்கு கொட்டித் தீர்க்க போகிறது கனமழை!!

தமிழகத்தில் இன்னும் ஐந்து நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது!
 
உஷாரய்யா உஷாரு தமிழகத்திற்கே எச்சரிக்கை!அஞ்சு நாளைக்கு கொட்டித் தீர்க்க போகிறது கனமழை!!

 தமிழகத்தின் பல பகுதிகளில் கோடை மழை பெய்து வருகிறது. இதனால் பகுதியில் வாழும் மக்கள் வெயிலின் தாக்கத்தை குறைந்ததாக எண்ணி சந்தோஷத்தில் உள்ளனர். மேலும் தமிழக மக்களுக்கு மற்றுமொரு மகிழ்ச்சி கலந்த எச்சரிக்கையான தகவலை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் மேலும் 5 நாட்களுக்கு கன மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் கூறியுள்ளது .காரணம் என்னவெனில் டவ் தே புயல் எதிரொலியால் தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு பலத்த மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.rain

மேலும் மத்திய கிழக்கு மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் டவ் தே  புயல் நிலைகொண்டுள்ளது .இதனால் அடுத்த 6 மணி நேரத்தில் தீவிர புயலாக மாறும் அதைத்தொடர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் தீவிர புயலாக இந்த டவ் தே  புயல் வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும் இதனால் 7 மாவட்டங்களுக்கு வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது. அதை தொடர்ந்து 24 மணி நேரத்தில் நீலகிரி கோவை தேனி ஈரோடு சேலத்தில் மிக பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. நாளை நீலகிரி தேனியில் இடி மின்னலுடன் கூடிய கனமழை யும் இதர மாவட்டங்களில் மிதமான கனமழையும் பெறப்படும் என்று கூறியுள்ளது. மே 17, 18, 19 தேதிகளில் நீலகிரி தேனி குமரியில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

தமிழகத்தின் இதர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னையில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் குமரிக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு சூறாவளி காற்று வீசக் கூடும் என்பதால் மத்திய கிழக்கு ,தென் கிழக்கு அரபிக்கடலில் லட்சத்தீவு பகுதிகளிலும் பலத்த சூறாவளி காற்று வீச வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளது. இதனால் கேரளம், கர்நாடகம் பகுதிகளில் பலத்த சூறாவளி வீசும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.  காற்றானது 60 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என்பதால் அடுத்த இரண்டு நாட்களுக்கு மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம்.

From around the web