அமெரிக்க அதிபர் தேர்தல்: 2 வேட்பாளர்களும் சமமாக வாக்கு பெற்றால் என்ன ஆகும்


 

 
அமெரிக்க அதிபர் தேர்தல்: 2 வேட்பாளர்களும் சமமாக வாக்கு பெற்றால் என்ன ஆகும்

அமெரிக்க அதிபர் தேர்தல் நேற்று நடைபெற்ற நிலையில் இன்று காலை முதல் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளர்களான ஜோபைடன் மற்றும் டிரம்ப் ஆகிய இருவருமே கிட்டத்தட்ட சம இடங்களை பெற்றுள்ளனர். இருப்பினும் ஜோபைடன் சற்று அதிகம்,ஆக அதாவது 238 இடங்களையும் டிரம்ப் 213 இடங்களையும் பெற்று உள்ளதால் இருவருக்கும் இடையே பெரிய வித்தியாசம் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது 

இந்தநிலையில் ஒருவேளை இரு வேட்பாளர்களும் சமமான இடங்களையும் பெற்றால் என்ன நடக்கும் என்பது குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பிடன் மற்றும் பிரான்ஸ் ஆகிய இருவரும் மொத்தமுள்ள 538 இடங்களில் சரிசமமாக 269 இடங்களை பெற்றால் அடுத்த அதிபரைத் தேர்வு செய்வதற்கான நடைமுறை முயற்சிகளை மேற்கொள்ள பிரதிநிதிகள் சபை தயாராக இருக்கும் என்று சபாநாயகர் கூறியிருக்கிறார் 

ஆனால் அதே நேரத்தில் பிரதிநிதிகள் சபையில் ஜனநாயக கட்சி பெரும்பான்மை நோக்கி சென்றாலும் ஜோபைடன் தாமாகவே அதிபராகிவிடுவார் என்பதை உறுதியாக கூற முடியாது என்றும் அமெரிக்க அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

From around the web