நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: வெற்றி பெறுவது யார்?

 

உலகமே எதிர்பார்த்து காத்திருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் நாளை நடைபெற உள்ளது. நாளை தான் அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது என்றாலும் ஏற்கனவே 9 கோடி பேர் வாக்களித்து விட்டார்கள் என்பதும் அமெரிக்க தேர்தல் வரலாற்றில் இப்படி ஒரு நிகழ்வு இதற்கு முன் நடந்தது இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது 

ஜனநாயக கட்சியின் சார்பில் போட்டியிடும் ஜோ பிடன் அவர்கள் வெற்றி பெறுவார் என பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் கூறினாலும், குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் டிரம்புக்கும் ஓரளவு ஆதரவு இருக்கிறது என்பதால் போட்டி கடுமையாக இருக்கும் என்று கூறப்படுகிறது 

டிரம்ப், ஜோபிடன் ஆகிய இருவரும் கடந்த சில நாட்களாக தீவிரமாக பிரச்சாரம் செய்து வந்தார்கள் என்பதும் இருவருக்குமே நல்ல கூட்டம் கூடியது என்பதும் குறிப்பிடத்தக்கது. நாளை நடைபெறும் தேர்தலில் சுமார் 15 கோடி பேர் வாக்களிக்க உள்ளதாகவும் இந்த வாக்குப்பதிவு முடிந்தவுடன் வாக்குகள் எண்ணப்படும் என்றும் முதலில் தபால் ஓட்டுகள், அதன்பின்னர் முன்கூட்டியே வாக்களித்தவர்கள் ஓட்டுகள், அதன் பின்னர் நாளை பதிவான வாக்குகள் என படிப்படியாக எண்ணப்படும் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவை அறிய உலகமே காத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web