அமெரிக்க அதிபர் தேர்தல்: கமலா ஹாரீஸின் காரசாரமான விவாதம்!

 

அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 3-ம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் இன்று அமெரிக்க அதிபர் துணை தேர்தலில் போட்டியிடும் மைக் பென்ஸ்மற்றும் கமலா ஹாரிஸ் ஆகிய இருவருக்கும் இடையே நேருக்கு நேர் விவாதம் நடந்து வருகிறது. இந்த விவாதத்தில் இருவரும் காரசாரமாக விவாதம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது 

முதலில் விவாதம் செய்த மைக் பென்ஸ் கோரோனோ என்ற மிகப்பெரிய சவாலை அமெரிக்க அரசு மிகவும் புத்திசாலித்தனமாக சமாளித்தது என்றும் அமெரிக்க அரசு எடுத்த அதிரடி நடவடிக்கைகளால் தான் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டது என்றும் கூறினார் 

ஆனால் அதற்கு இடைமறித்த கமலா ஹாரீஸ், அதிபர் டிரம்ப்பின் தோல்வியால் தான் கொரோனா வைரஸால் நாடு முழுவதும் 70 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கூறினார். மேலும் அமெரிக்கர்கள் பலனடைந்த ஒபாமா கேர் திட்டத்தை டிரம்ப் நிறுத்தி விட்டார் என்றும் அது மிகப்பெரிய தவறு என்றும் ஒபாமாவின் பல நல்ல திட்டங்களை முடிவுக்கு கொண்டு வந்தவர் தான் டிரம்ப் என்றும் குற்றம் சாட்டினார் 

ஆனால் ஜோ பிடன் பல ஆண்டுகளாக சீனாவுக்கு ஆதரவான தலைவராக இருக்கிறார் என்றும் குற்றம் சாட்டினார் மைக் பென்ஸ், ஜோ பிடன் பொருளாதாரத் திட்டம் சீனாவிடம் சரணடைவு போல் உள்ளது என்று அவர் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து மைக் பென்ஸ் மற்றும் கமலா ஹாரிஸ் ஆகியோர் காரசாரமாக விவாதம் செய்து வருகின்றனர்

From around the web