அமெரிக்க அதிபர் டிரம்ப் இன்று டிஸ்சார்ஜ்: மீண்டும் தேர்தல் பிரச்சாரமா?

 

அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நிலையில் இன்று அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன 

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட அமெரிக்க அதிபர் டிரம்ப் முதலில் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டார். ஆனால் அதன்பின் அவருக்கு காய்ச்சல் அதிகமானதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவரது உடல்நிலை தேறி வருவதாகவும் சீராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது 

இந்த நிலையில் இன்று அமெரிக்க அதிபர் டிரம்ப் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்களில் இருந்து தகவல் வெளிவந்துள்ளது. இருப்பினும் அவருக்கு கொரோனா வைரஸ் நோய் முற்றிலும் குணமாகி விட்டதா? அல்லது வீட்டில் இருந்தே சிகிச்சை மேற்கொள்வாரா? என்பது குறித்த தகவல் இல்லை 

மேலும் நவம்பர் 3ஆம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் டிரம்ப் மீண்டும் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குவது எப்போது? என்பது குறித்த தகவல்களை விரைவில் அவரது கட்சி விரைவில் அதிகாரபூர்வமாக வெளியிடும் என்று தகவல்கள் வெளிவந்துள்ளது

இந்த நிலையை டிரம்பை எதிர்த்துப் போட்டியிடும் ஜோபிடன் சூறாவளி பிரச்சாரம் செய்து வாக்குகளை சேகரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web