அனுதாப வாக்குகளைப் பெற தனக்குத்தானே கடத்தல் நாடகம் நடத்திய வேட்பாளர் கைது!

அமெரிக்காவில் மேயர் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் மேயர் தேர்தல் வேட்பாளர் ஒருவர் தனக்குத்தானே கடத்தல் நாடகம் நடத்துவதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது அமெரிக்காவின் தெற்கு கரோலினா என்ற பகுதியில் மேயர் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடும் சப்ரின பெல்சார் என்ற வேட்பாளர் தனக்குத்தானே கடத்தல் நாடகம் நடத்தி உள்ளார். தன்னை யாரோ கடத்தி விட்டதாகவும் தன்னை காப்பாற்றும்படியும் அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் இதுகுறித்து விசாரணை
 

அனுதாப வாக்குகளைப் பெற தனக்குத்தானே கடத்தல் நாடகம் நடத்திய வேட்பாளர் கைது!

அமெரிக்காவில் மேயர் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் மேயர் தேர்தல் வேட்பாளர் ஒருவர் தனக்குத்தானே கடத்தல் நாடகம் நடத்துவதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

அமெரிக்காவின் தெற்கு கரோலினா என்ற பகுதியில் மேயர் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடும் சப்ரின பெல்சார் என்ற வேட்பாளர் தனக்குத்தானே கடத்தல் நாடகம் நடத்தி உள்ளார். தன்னை யாரோ கடத்தி விட்டதாகவும் தன்னை காப்பாற்றும்படியும் அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்

இதுகுறித்து விசாரணை செய்த போலீசார் வேட்பாளர் சப்ரினா பெல்சார் அனுதாப வாக்குகளை பெறவும், பப்ளிசிட்டிக்காகவும், அவரே கடத்தல் நாடகம் நடத்தி இருப்பதாகவும் இந்த வீடியோவும் அவரது தரப்பினர் எடுக்கப்பட்ட வீடியோவும் என்பதை உறுதி செய்தனர்

பின்னர் இது குறித்து பதிவு செய்யப்பட்ட வழக்கின் படி மேயர் வேட்பாளர் சப்ரினா கைது செய்யப்பட்டார். மேயர் வேட்பாளர் ஒருவர் பப்ளிசிட்டி மற்றும் அனுதாப ஓட்டுகளை பெறுவதற்காக தனக்குத்தானே கடத்தல் நாடகம் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

From around the web